ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டாம் என வாக்களித்த நாடு
Iceland votes to stay out of European Union: ஐஸ்லாந்து மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டாம் என்று வாக்களித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு எதிராக ஐஸ்லாந்து வாக்களித்துள்ளது.
ஐஸ்லாந்து
தீவு நாடான ஐஸ்லாந்து 2009-ஆம் ஆண்டில் நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முதன்முதலில் விண்ணப்பித்தது.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளை எதிர்க்கும் அரசு 2013-யில் ஆட்சிக்கு வந்த பிறகு பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
27 நாடுகள் கொண்ட பிரஸ்ஸல்ஸ் அமைப்பில் இணைய முன்மொழியப்பட்டது. ஒரு செல்வந்த உறுப்பு நாட்டினை வரவேற்பதில் ஐரோப்பிய ஒன்றியம் மிகுந்த ஆர்வம் காட்டியது.
ஐஸ்லாந்தின் வளமான மீன்பிடிப் பகுதிகளில் அனுமதி பெறுவது உள்ளிட்ட சிக்கலான விவகாரங்களில் கூட, அந்நாடு இணைவதை எளிதாக்க விட்டுக்கொடுத்து செயல்பட தயாராக இருந்தது.
இணைய வேண்டாம்
இந்த நிலையில், ஐஸ்லாந்து தலைநகர் Reykjavik-யில் உள்ள தற்போதைய நிர்வாகம், வர்த்தகப் போர்கள் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்திலான போட்டி ஆகியவற்றில் இருந்து நாட்டை பாதுகாக்கும் 'now or never' வகையிலான முக்கியமான தருணமான வாக்கெடுப்பை முன்னிறுத்தியது.
அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டாம் என்று ஐஸ்லாந்து வாக்களித்துள்ளது. மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு எதிராக இந்த வாக்களிப்பு நடந்துள்ளது.
ஐஸ்லாந்தின் சுமார் 4 லட்சம் மக்களில் 52.8 சதவீதம் பேர் இணைய வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் (பிரஸ்ஸல்ஸ்) விரிவாக்கத் திட்டங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய பிரதமரின் பதவிக்காலம் முடிவடையும் 2028-ஆம் ஆண்டு வரை, ஐஸ்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியே இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி மற்றும் தடையற்ற நடமாட்டத்திற்கான ஷெங்கன் மண்டலம் ஆகியவற்றில் ஐஸ்லாந்து உறுப்பினராக உள்ளது. எனவே, இந்த இரண்டு நிலைகளும் இந்த வாக்கெடுப்பால் மாற்றமின்றித் தொடரும் என தெரிய வந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |