வெளிநாட்டில் பிடித்துவைக்கப்பட்டுள்ள ஜேர்மன் செவிலியர்: விடுவிக்க கோரிக்கை
செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றும் ஜேர்மானிய செவியர் ஒருவர் ஏழு ஆண்டுகளாக சோமாலியா நாட்டில் பிடித்துவைக்கப்பட்டுள்ளார்.
அவரை விடுவிக்க ஜெனீவாவை மையமாகக் கொண்ட செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
7 ஆண்டுகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ள ஜேர்மன் செவிலியர்
சோனியா (Sonja Nientiet) என்னும் ஜேர்மானியப் பெண், சோமாலியா நாட்டில் செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றும்போது 2018ஆம் ஆண்டு கடத்தப்பட்டார்.
ஏழு ஆண்டுகளாக அவர் கடத்தல்காரர்கள் பிடியில் இருக்கும் நிலையில், சமீபத்தில் தன்னை விடுவிக்குமாறு கோரி அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து சோனியாவை உடனடியாக விடுவிக்குமாறு செஞ்சிலுவைச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு கருதி சோனியா கடத்தப்பட்டது, மற்றும் அவரைக் கடத்தியவர்கள் முதலான எந்த விவரத்தையும் வெளியிட செஞ்சிலுவைச் சங்கம் மறுத்துவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |