ஷுப்மன் கில் அதிரடி சதம்! வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கிய இந்தியா
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா-வங்கதேசம் மோதல்
இந்தியா-வங்கதேசம் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணி 49.4 ஓவர்களில் 228 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. தவ்ஹித் ஹ்ரிடோய் சதம் (100) அடித்து அசத்தினார். ஜாக்கர் அலி (68) அரைசதம் கடந்தார்.
பந்துவீச்சில் இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணி அபார வெற்றி
229 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது.
கேப்டன் ரோஹித் சர்மா 41 ஓட்டங்கள் குவித்து சிறப்பான தொடக்க கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் 101 ஓட்டங்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
கே.எல். ராகுல் தன்னுடைய பங்கிற்கு 41 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இறுதியில், இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணி இந்த வெற்றியுடன் அடுத்தது பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |