ஒரே ஆணுடன் ஒரே நேரத்தில் கர்ப்பமாக முயற்சிக்கும் இரட்டைச் சகோதரிகள்!
அவுஸ்திரேலியாவில் ஒரே மாதிரியான இரட்டைச் சகோதரிகள் ஒரே ஆணிடமிருந்து ஒரே நேரத்தில் கர்ப்பமாக முயற்சி செய்து வருகிறார்கள்.
அவுஸ்திரேலியாவில், ஒரே மாதிரியான ஆடைகளை அணிவது முதல் ஒரே நேரத்தில் குளியலறைக்குச் செல்வது வரை அனைத்தையும் ஒன்றாகச் செய்வதாக அறியப்படும் ஐடென்டிகள் ட்வின்ஸ் எனப்படும் ஒரே மாதிரி தோற்றத்தைக் கொண்டிருக்கும் இரட்டைச் சகோதரிகள், ஒரே ஆணை திருமணம் செய்து, ஒரே நேரத்தில் கர்ப்பமாக திட்டமிட்டுள்ளனர்.
அன்னா மற்றும் லூசி சகோதரிகள்
பெர்த் நகரத்தைச் சேர்ந்த 37 வயதாகும் அன்னா டெசின்கே (Anna) மற்றும் லூசி டெசின்கே (Lucy Decinque), 2021-ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க முயன்றதற்காக பிரபலமாக அறியப்பட்டனர். இருவரும் பென் பைர்ன் (Ben Byrne) எனும் நபரை வருங்கால கணவனாக பகிர்ந்துகொண்டுள்ளனர்.
Anna and Lucy DeCinque
இந்த இரட்டை உடன்பிறப்புகள் பிறந்ததில் இருந்தே தங்கள் பெற்றோரால் ஒரே மாதிரியான உடையணிந்தது மட்டுமின்றி பெரும்பாலான விடயங்களை ஒரே மாதிரி ஒரே நேரத்தில் செய்வதைப் பழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த அளவிற்கு என்றால், ஒருவர் கழிப்பறைக்குச் செல்லும்போது, மற்றோருவரும் அவருடன் செல்வார், ஒருவர் குளிக்கும்போது, மற்றோருவரும் அவருடன் குளிப்பார் என்று அன்னா கூறுகிறார்.
Anna and Lucy DeCinque
பிரிந்துவிடுவோமோ என்ற கவலை
"நாங்கள் ஒருபோதும் பிரிந்திருக்க மாட்டோம். நாங்கள் ஒருவருக்கொருவர் இல்லாமல் செயல்பட முடியும் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. நங்கள் பிரிந்துவிடுவோமோ என்ற கவலை எங்களுக்கு உள்ளது. நாங்கள் ஒருவருக்கொருவர் பிணைக்கப்பட்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.
"நாங்கள் இப்போது குழந்தைகள் வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்," இன்று இருவரும் கூறினர். "எங்கள் கனவு ஒரே நேரத்தில் ஒன்றாக கர்ப்பமாக இருக்க வேண்டும்." என்று கூறியுள்ளனர்.
Womens Day