லெபனான் மீது தாக்குதலை தொடரும் இஸ்ரேல்: 16 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்
லெபனான் மீது இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லெபனான் மீது தாக்குதல்
தெற்கு லெபனானில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா படையினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தங்களது X தளத்தில் விளக்கத்தை அளித்துள்ளனர்.
அதில் ஹிஸ்புல்லா அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சரியாக பின்பற்றவில்லை. அதன் காரணமாகவே இந்த பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 16 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக லெபனான் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இருப்பினும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் குறித்து எந்தவொரு தகவலையும் இஸ்ரேலிய ராணுவம் இதுவரை வெளியிடவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |