தெஹ்ரானில் பற்றி எரியும் எண்ணெய் கட்டமைப்புகள்: இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தாக்குதல்
ஈரானில் உள்ள பல எரிபொருள் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பல எரிசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேலிய படைகள் துல்லிய வான்வழித் தாக்குதல் நடத்தி இருப்பதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் தாக்குதலுக்கு உள்ளான இந்த குறிப்பிட்ட இடங்கள் ஈரானின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான முக்கிய மையங்களாக செயல்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
JUST IN: 🇺🇸🇮🇷 Another video showing the aftermath of US strikes on an Iranian oil depot in Tehran, Iran. pic.twitter.com/RYJjW9ySfZ
— BRICS News (@BRICSinfo) March 7, 2026
ஈரான் இந்த எரிசக்தி தொட்டிகளை விரிவான ராணுவ கட்டமைப்பை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் பயன்படுத்தி வருவதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானின் தளவாட விநியோகத்தை கட்டுப்படுத்த முடியும், உள்கட்டமைப்பு தயார் நிலையை முடக்க முடியும் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான உடனடி மற்றும் நீண்ட கால அச்சுறுத்தல்களை அகற்ற முடியும் ஆகியவை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரின் இந்த தாக்குதலின் நோக்கமாக உள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் பற்றி எரியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |