தெற்கு காசாவில் குவிந்து கிடந்த ஆயுதங்கள்! ரகசிய சுரங்கப்பாதையை கண்டுபிடித்த இஸ்ரேல்
தெற்கு காசா பகுதியில் ஹமாஸின் ஆயுதக்கிடங்கு மற்றும் ரகசிய சுரங்கப்பாதை அமைப்பை இஸ்ரேலிய ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக் கிடங்கு, ரகசிய சுரங்கப்பாதை
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், இஸ்ரேலிய படைகள் தெற்கு காசா பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

அப்போது செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது இஸ்ரேலிய படையினர், ஹமாஸ் மறைத்து வைத்திருந்த மிகப்பெரிய ஆயுதக் குவியலையும், ரகசிய சுரங்கப்பாதை ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவத்தின் 188 வது கவச பிரிகேட் போர் குழுவினர் தெற்கு காசாவின் எல்லைப் பகுதியில் உள்ள மஞ்சள் கோட்டுக்கு அருகே துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியலை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட X தளத்தில் வெளியிட்ட தகவலில் பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நவீன 47 ரக துப்பாக்கிகள், ராக்கெட் கையெறி குண்டுகள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள், போர் தளவாடங்கள் கைப்பற்ற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதியில் ஆயுதக் குழுவின் உள்கட்டமைப்பு முற்றிலுமாக சிதைக்கும் நோக்கில் இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |