ஹமாஸ் படையின் முக்கிய தளபதியை கொன்ற IDF: அடையாளத்தை வெளியிட்ட இஸ்ரேல்
ஹமாஸ் படையின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.
கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி
இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹமாஸ் படையின் முக்கிய தகவல் தொடர்பு பிரிவு தளபதி கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியிட்ட தகவலில், காசா நகரில் நடத்தப்பட்ட துல்லியமான வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தகவல் தொடர்பு தளபதி அழிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட ஹமாஸ் அதிகாரி அபு ஹட்சீரா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக X தளத்தில் இஸ்ரேலிய படைகள் வெளியிட்ட தகவலில், ஹமாஸ் அதிகாரி அபு ஹட்சீரா இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு திட்டமிட்டு வந்ததாக குறிப்பிட்டு, மிக துல்லியமான வான்வழித் தாக்குதல் மூலம் வெளியேற்றி இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வார தொடக்கத்தில் IDF நடத்திய மற்றொரு தாக்குதல் தொடர்பான விவரங்களையும் இதில் குறிப்பிட்டுள்ளது. அதில், கடந்த வாரம் ஹமாஸின் உற்பத்தி துறையை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 2 அதிகாரிகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |