இஸ்ரேலிய படைகளுக்கு கிடைத்த உளவுத்தகவல்: ஹிஸ்புல்லா ஆயுதக்கிடங்கு தகர்ப்பு
தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலிய படைகள் தாக்குதல்
தெற்கு லெபனானின் ஹிஸ்புல்லா படையினரின் இருப்புகளை குறிவைத்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் திங்கட்கிழமை அன்று தீவிர தாக்குதலை முன்னெடுத்தனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், இஸ்ரேலிய படையினர் நிலை கொண்டுள்ள பகுதிக்கு அருகில் ஹிஸ்புல்லா படையினர் இருவர் நுழைந்ததை இஸ்ரேலிய படை பிரிவை சேர்ந்த டிவிஷன் 146 வீரர்கள் கண்காணித்தனர்.
ரகசியமாக நுழைந்த ஹிஸ்புல்லா வீரர்கள் இஸ்ரேலிய வீரர்களுக்கு எதிராக தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இதையடுத்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இஸ்ரேலிய விமானப் படையினர் ஹிஸ்புல்லா வீரர்கள் பதுங்கி இருந்த குறிப்பிட்ட கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தி இருவரை அழித்தனர்.
ஆயுதக்கிடங்கு தகர்ப்பு
இந்த தாக்குதலை அடுத்து, தெற்கு லெபனானின் அமைந்துள்ள ஹிஸ்புல்லா ஆயுதக் கிடங்கு ஒன்றையும் இஸ்ரேலிய படைகள் தாக்கி அழித்தனர்.
மேலும், ஹிஸ்புல்லா ஏவிய இரண்டு ட்ரோன்கள் இஸ்ரேலிய இராணுவத்தினர் ஆளில்லா பொறியியல் வாகனத்தை தாக்கி அழித்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |