இஸ்ரேலிய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்: ஹமாஸின் முக்கிய தலைவர் உயிரிழப்பு
இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் இப்னு அல் தின் அல் ஹத்தாத் கொல்லப்பட்டுள்ளார்.
ஹமாஸின் முக்கிய தலைவர் உயிரிழப்பு
சனிக்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியிட்ட அறிவிப்பில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் இப்னு அல் தின் அல் ஹத்தாத் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமது சின்வார் கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இப்னு அல் தின் அல் ஹத்தாத் அப்பதவியில் அமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேலிய மக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இப்னு அல் தின் அல் ஹத்தாத் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தங்களுடைய X தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
இப்னு அல் தின் அல் ஹத்தாத், ஹமாஸின் செயல்பாடுகள் மட்டுமின்றி, பிணைக் கைதிகள் சிறை வைப்பு தொடர்பான பொறுப்புகளையும் கவனித்து வந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் இஸ்ரேலிய இராணுவத்தின் வான்வழித் தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகவே பிணைக் கைதிகளை எப்போது தன்னை சுற்றி இப்னு அல் தின் அல் ஹத்தாத் வைத்திருந்ததாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |