இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து பாயும் ஹமாஸ் ராக்கெட்டுகள்: பதிலடி கொடுத்த இஸ்ரேல்
இஸ்ரேலிய நகரான டெல் அவிவ் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதலை தொடங்கிய பிறகு, இஸ்ரேல் ராணுவம் தனது பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது.
ஹமாஸ் தாக்குதல்
21 நாளாக இஸ்ரேல் ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடுமையான போர் தாக்குதல் நீடித்து வருகிறது.
இஸ்ரேல் ஹமாஸ் ஆகிய இரு தரப்புகளும் மாறி மாறி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.
‼️ #Hamas is shelling the Israeli city of #Sderot en masse pic.twitter.com/ZhTXSzf5BL
— NEXTA (@nexta_tv) October 27, 2023
அந்த வகையில் சில மணி நேரங்களுக்கு முன்பு இஸ்ரேலிய நகரான டெல் அவிவ் மீது ஹமாஸ் படையினர் ஏவுகணை தாக்குதலை தொடங்கி இருப்பதாக ஹமாஸின் ராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது இஸ்ரேலின் மற்றொரு தெற்கு பகுதி நகரான Sderot மீது ஹமாஸ் படையினர் ராக்கெட் தாக்குதலை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் பதிலடி
ஹமாஸின் பெரிய அளவிலான ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தங்களது பதிலடி தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
The Israel Defense Forces launch airstrikes and artillery fire, Hamas terrorists respond with large-scale rocket launches. pic.twitter.com/StNmexo22V
— NEXTA (@nexta_tv) October 27, 2023
ஹமாஸ் இருப்புகளை குறி வைத்து இஸ்ரேல் ராணுவ படையினர் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இஸ்ரேலிய ஊடகங்கள் 3 முக்கிய வீடியோக்களை பகிர்ந்துள்ளது. அதில் இஸ்ரேலின் “Iron Dome”(இஸ்ரேலின் சிறப்பு வான் பாதுகாப்பு அமைப்பு) ஹமாஸ் படைகளின் ராக்கெட்டுகளுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதை காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |