கடலில் இருந்து காசா மீது பாய்ந்த ராக்கெட்டுகள்: தாக்குதல் வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம்
காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைகளின் நிலைகளை இஸ்ரேல் கடல் வழியாக தாக்கும் வீடியோ காட்சிகளை அந்த நாடு வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலிய ராணுவத்திற்கும் இடையே போர் தாக்குதலானது 10வது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்த போர் தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவம் லேசர் ஆயுதங்கள் முதல் அதிநவீன போர் ஆயுதங்களை பயன்படுத்தி பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 2000 மக்கள் பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
ஹமாஸின் தாக்குதல் கொடூரமான அட்டூழியம்! அவர்கள் எதிர்த்து போராட அனைத்தையும் செய்வேன் - சூளுரைத்த இஸ்ரேல் நடிகை
போர் கப்பல்கள் மூலமாக தாக்குதல்
இந்நிலையில் கடலில் இருந்து பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகளை இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது.
The Israel Defense Forces published footage of strikes on the Gaza Strip from the sea.
— NEXTA (@nexta_tv) October 16, 2023
The Sa'ar 6 INS Magen and INS Oz class corvettes struck Hamas terrorist military facilities. pic.twitter.com/c76Oxv7i9d
ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதல் நிலையை குறிவைத்து இஸ்ரேலின் Sa'ar 6 INS Magen மற்றும் INS Oz வகுப்பு போர் கப்பல்கள் தாக்குதல் நடத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |