பிரித்தானிய உட்பட 32 நாடுகள் எடுத்த முடிவு: 400 மில்லியன் கச்சா எண்ணெய் விடுவிப்பு
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாட்டை சரிசெய்ய அவசரகால எண்ணெய் கையிருப்பை வெளியிட IEA முடிவு செய்துள்ளது.
400 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் விடுவிப்பு
சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டு வரும் ஏற்ற இறக்கங்களை சரி செய்யும் விதமாக பன்னாட்டு எரிசக்தி முகமை(IEA) வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.
அதாவது எரிசக்தி விநியோகச் சங்கலியை உறுதிப்படுத்தும் நோக்கில் அவசர கையிருப்பில் இருந்து சுமார் 400 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் விடுவிக்க முடிவு செய்துள்ளது.

பிரித்தானியா உட்பட்ட 32 உறுப்பு நாடுகளின் ஒருமனதான சம்மதத்துடன் இந்த முடிவை IEA எடுத்துள்ளது.
விநியோக நெருக்கடி மற்றும் உள்நாட்டு தேவைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்ப இந்த 400 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயும் அந்தந்த நாடுகளின் சந்தைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரின் போது 182.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை மட்டுமே IEA வெளியிட்டு இருந்த நிலையில், முதல் முறையாக கிட்டத்தட்ட 400 மில்லியன் பேரல்களை IEA வெளியிடவுள்ளது.
Iranian drones reportedly struck oil storage tanks at the Port of Salalah in Oman, with multiple tanks engulfed in flames. pic.twitter.com/BGheaLYcOY
— GMI (@Global_Mil_Info) March 11, 2026
ஈரான் மோதலின் விளைவுகள்
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நேரடி போர் தாக்குதல்கள் விளைவாக இந்த உலகளாவிய எரிசக்தி விநியோகமானது தடைப்பட்டுள்ளது.
முக்கியமாக உலகின் 20% எரிசக்தி போக்குவரத்தை கையாளும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடியுள்ளதால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மிகப்பெரிய அளவில் தடைப்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் கத்தார் நாடுகளின் எண்ணெய் நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதும் எரிசக்தி உற்பத்தி தடைக்கு காரணமாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |