மத்திய கிழக்கு பதற்றம்: சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: IEA அறிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் நுகர்வு மாற்றங்கள் குறித்த எச்சரிக்கையை சர்வதேச எரிசக்தி முகமை மாற்றியமைத்துள்ளது.
மேலும் 2026ம் ஆண்டிற்கான உலகளாவிய எரிசக்தி சந்தை குறித்த தனது கணிப்புகளையும் சர்வதேச எரிசக்தி முகமை(IEA) அதிரடியாக மாற்றியமைத்துள்ளது.
சமீபத்தில் மத்திய கிழக்கில் நேர்மறையான சூழல் சற்று உருவானது ஆனால் தற்போது மீண்டும் பதற்றம் அதிகரித்து இருப்பதால் உலக அளவிலான எண்ணெய் விநியோகத்தில் பெரும் சரிவு இருக்கும் என்று ஐ.இ.ஏ கணித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தின் படி, உலகளாவிய எண்ணெய் விநியோகம் +1.1 மில்லியன். bpd ஆக அதிகரித்தது. ஆனால் தற்போது -1.5 மில்லியன் bpd ஆக சரிந்துள்ளது.
சந்தையில் தற்போது கிட்டத்தட்ட 410000 பேரல் உபரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடந்த வாரங்களில் இருந்த சில முந்தைய கணிப்புகளான மில்லியன் கணக்கான பேரல் உபரிகளுடன் ஒப்பிடும்போது மிக குறைவான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் ஜலசந்தி
போருக்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நாளொன்றுக்கு சுமார் 20 மில்லியன் பேரல்களுக்கு மேல் போக்குவரத்து நடைபெறும்.
ஆனால் தற்போது நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3.8 மில்லியன் பேரல்கள் போக்குவரத்து மட்டுமே நடைபெறுகிறது.
மேலும் சமீபத்தில் ஹார்முஸ் துறைமுக முற்றுகை நடவடிக்கையை அமெரிக்கா அறிவித்து இருப்பதால் இயற்கை எரிவாயு திரவங்களின் போக்குவரத்து மேலும் முடக்கப்பட்டு இருப்பதாக IEA தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |