AI மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறினால்., டிரம்ப் கொடுத்த சூப்பர் Idea
மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்தால் ஒட்டுமொத்த AI தொழில்நுட்பத்தையும் தடுத்து நிறுத்த kill Switch அவசியம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
AI குறித்து டிரம்ப் கருத்து
செயற்கை நுண்ணறிவு என்பது அனைவரது கையிலும் கிடைக்கும் மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்பமாக இன்று உருவெடுத்துள்ளது.
மக்களின் அன்றாட வாழ்வியலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு உதவிகளை செய்தாலும், எதிர் வரும் காலங்களில் இந்த AI தொழில்நுட்பம் மனித குலத்திற்கு ஆபத்தாக மாறி விடுமோ என்ற அச்சம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டால் அதனை முடக்குவதற்கு ஒரு வழிவகை இருக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
kill Switch அவசியம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட். டிரம்ப், பாக்ஸ் பிசினஸ் நெட்வொர்க் ஊடக நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது வங்கி துறைகளை பாதுகாப்பானதாகவும், திறமையானதாகவும் மாற்றக்கூடும் என்று பதிலளித்தார்.

அத்துடன் எதிர்காலத்தில் AI தொழில்நுட்பத்தால் மனித குலத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனே அதை ஒட்டுமொத்தமாக செயலிழக்க செய்ய kill Switch போன்ற அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்புக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் kill Switch அமைப்பு எவ்வாறு மற்றும் யாரால் கட்டுப்படுத்தப்படும் என்று அவர் விளக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |