அம்பானி தினமும் ஒரு கோடி தானம் செய்தால் அவரது சொத்து எத்தனை ஆண்டுகளில் காலியாகும்?
அம்பானி தினமும் ஒரு கோடி நன்கொடை வழங்கினால், அவரது சொத்து மதிப்பு எப்போது காலி ஆகும் என்பதை பார்க்கலாம்.
அம்பானி சொத்து மதிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பணக்காரர் பட்டியலை Hurun india அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது.
இதில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் ரூ.9.55 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது.
பல ஆண்டுகளாக இந்த பட்டியலில் அம்பானி முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு அதானி குழும தலைவர் கௌதம் அதானி அம்பானியை முந்தினார். தற்போது அம்பானி மீண்டும் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
தினமும் ரூ.1 கோடி நன்கொடை வழங்கினால்...
TIME100 அமைப்பின் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் அம்பானி பல்வேறு சமூக முயற்சிகளுக்காக ரூ.407 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
அம்பானி, தினமும் ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கினால் அவரது மொத்த சொத்துமதிப்பு எப்போது காலியாகும் என்பதை பார்க்கலாம்.
கிரிக்கெட் அணி, ஊடகங்கள், எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், சில்லறை வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு என பல்வேறு தொழில்களை வைத்துள்ள ரிலையன்ஸ் குழுமம் மூலம், அம்பானி நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.163 கோடி வருமானம் ஈட்டுவதாக கூறப்படுகிறது.
இதனால், நாளொன்றுக்கு ஒரு கோடி என்பது மிகக்குறைந்த தொகை ஆகும். தினமும் ஒரு கோடி தானமாக வழங்கினால், அவரது சொத்து காலியாக 2,616 ஆண்டுகள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |