உக்ரைன் இதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே ரஷ்ய தாக்குதலை நிறுத்தும்! துருக்கி அதிபரிடம் வெளிப்படையாக கூறிய புடின்
ரஷ்யா கோரிக்கைகளை அமுல்படுத்த உக்ரைன் ஒப்புக்கொண்டால் மட்டுமே தாக்குதலை நிறுத்துவோம் என துருக்கி அதிபர் எர்டோகனிடம் புடின் தெரிவித்துள்ளார்.
இன்று தொலைபேசி மூலம் ரஷ்ய அதிபர் புடினை தொடர்புக்கொண்ட துருக்கி அதிபர் எர்டோகன், உக்ரைன் போர் குறித்து விவாதித்துள்ளார்.
இதன்போது, உக்ரைன், ரஷ்யா கோரிக்கைகளை அமுல்படுத்த ஒப்புக்கொண்டு, தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே, உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவ்டிக்கை நிறுத்தப்படும் என புடின் எர்டோகனிடம் கூறியுள்ளார்.
உக்ரைனில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் ரஷ்ய படைகள் மேற்கொண்டு வருவதாக புடின் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனில் மோதல்கள் இடம்பெற்று வரும் பகுதிகளிலிருந்து துருக்கிய குடிமக்களை வெளியேற்ற ரஷ்யா உதவும் என எர்டோகனிடம் புடின் உறுதியளித்துள்ளார்.
அதேசமயம், உக்ரைனில் உடனடியாக பொது போர்நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு புடினிடம் ஏர்டோகன் வலியுறுத்தியதாக துருக்கி ஐனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.