என் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தி பாருங்கள் பார்ப்போம்! தில்லாக சவால் விட்ட சீமான்
என் வீட்டில் வருமான வரி சோதனை நடத்துங்கள் என சீமான் சவால் விட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் அவர் நேற்றிரவு எர்ணாவூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னர் அவர் பேசுகையில், தன்னாட்சி அதிகாரம் பெற்ற, வருமான வரித் துறை உள்ளிட்ட ஐந்து அமைப்புகளை, மோடி ஐந்து விரல்களாக பயன்படுத்தி அதை வைத்து மிரட்டுகிறார்.
ஏன், என் வீட்டில் ஒரு முறை வருமான வரி சோதனை நடத்தி பாருங்கள் பார்ப்போம். நகை மற்றும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்கின்றனர்.
ஏன் ஓராண்டிற்கு முன்பே, தள்ளுபடி செய்திருக்கலாம். வெற்று அறிவிப்புகளாக, இலவசங்களை அறிவித்து, மக்களை ஏமாற்றுகின்றனர் என கூறியுள்ளார்.
