வாழ்நாள் முழுக்க பானி பூரி சாப்பிட ரூ.99,000 கொடுத்தால் போதும்! கடைக்காரரின் புதுவித அறிவிப்பு
பானிபூரி கடைக்காரர் ஒருவர் தனது கடையில் வாழ்நாள் முழுக்க பானி பூரி சாப்பிட ரூ.99,000 கொடுத்தால் போதும் என்று தனித்துவமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடைக்காரர் அறிவிப்பு
தற்போது வட நாட்டில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலும் பானி பூரிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. மாலை நேரத்தில் பானி பூரி கடைகளில் அளவுக்கு மிகுந்த கூட்டம் காணப்படும்.
இந்நிலையில், நாக்பூரைச் சேர்ந்த பானி பூரி விற்பனையாளர் ஒருவர் வினோதமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, "வாழ்நாள் முழுவதும் பானி பூரி சாப்பிட ஒரு முறை ரூ.99,000 செலுத்தினால் போதும்" என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இவரின் அறிவிப்பு தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதற்கு பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒருவர், "இது விற்பனையாளருக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் பைத்தியம்" என்று விமர்சனம் செய்துள்ளார்.
அதேபோல மற்றொரு பயனர் ஒருவர், "நவீன யுக்தியாகவும் புதுமையான வணிக நடவடிக்கையாகவும் தெரிகிறது" என்றார்.
இன்னொருவர், "பணத்தை வாங்கிவிட்டு விற்பனையாளர் தலைமறைவாகி விடுவாரே? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |