என்னை பார்க்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை கட்டாயம்.., கங்கனா ரனாவத் நிபந்தனை
தொகுதி மக்கள் என்னை பார்க்க வேண்டும் என்றால் ஆதார் அட்டையுடன் வருமாறு இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக எம்.பி கங்கனா ரனாவத் நிபந்தனை விதித்துள்ளார்.
கங்கனா நிபந்தனை
தொகுதி மக்கள் தன்னை பார்க்க வரும்போது ஆதார் அட்டையுடன் வருமாறு பாஜக எம்.பி கங்கனா ரனாவத் நிபந்தனை விதித்துள்ளார்.
அவர் இது குறித்து பேசுகையில், "சுற்றுலா பயணிகள் வரக்கூடிய மாநிலமாக இமாச்சல பிரதேசம் உள்ளது. என்னுடைய தொகுதி மக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக ஆதார் அட்டையுடன் வரவேண்டும் கூறியுள்ளேன்.
அதோடு, என்னை சந்திப்பதற்கான காரணத்தையும், தொகுதி பிரச்சனைகளையும் காகிதத்தில் எழுதி வருமாறு கேட்டு கேட்டு கொள்கிறேன்.
சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் சாமானிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால் தான் இந்த முடிவு" என்று கூறியுள்ளார்.
இதற்கு காங்கிரசை சேர்ந்த விக்ரமாதித்ய சிங் கூறுகையில், "கங்கனா ரனாவத் ஒரு மக்கள் பிரதிநிதி. எனவே, ஒரு மாநிலத்தின் ஒவ்வொரு பகுதி மக்களையும் சந்திப்பது அவரது பொறுப்பு.
எந்த ஒரு பணியாக இருந்தாலும் சரி தனிப்பட்ட அடையாளங்கள் இல்லாமல் மக்களை சந்திக்கலாம். ஆவணங்களை கொண்டு வந்தால் மட்டும் தான் மக்களை சந்திப்பேன் என்று கூறுவது சரியல்ல" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |