இலவச உணவு சாப்பிட்டு, நடந்தே வேலைக்கு சென்ற கூகிள் ஊழியர்: 29 வயதில் வேலையை விட்ட துணிவு
மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிக சம்பளத்துடன் கூகிள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததும், இளம் வயதிலேயே ஓய்வு பெறுவது குறித்தும் திட்டமிட்டுள்ளார்.
10 சதவிகிதம் செலவிட வேண்டும்
மும்பையை சேர்ந்த டேனியல் ஜார்ஜ் என்பவர் தமது 24 வயதில் ஆண்டுக்கு 265,000 டொலர் சம்பளத்தில் கூகிள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். 2015ல் பாம்பே ஐ.ஐ.டியில் இருந்து பொறியில பட்டம் பெற்ற பின்னர், பெருந்தொகை சேமிப்புடன் இளம் வயதிலேயே பணி ஓய்வு பெறுவது குறித்து ஜார்ஜ் திட்டம் தீட்டியுள்ளார்.
2018ல் கூகிள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ஜார்ஜ், ஆடம்பர வாழ்க்கை வாழத் தொடங்கினார். வார இறுதி நாட்களை கொண்டாடினார். ஓராண்டுக்கு பின்னர் தான் புரிந்துகொண்டார், தமது வருவாயில் 50 சதவிகிதம் வரி செலுத்துவதிலேயே கரைகிறது என்பதை.
இதனையடுத்து பெருந்தொகை சேமிப்புடன் இளம் வயதில் ஓய்வு பெறுவது குறித்து திட்டமிட்டுள்ளார். தமது வருவாயில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே செலவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
அத்துடன், அலுவலகத்திற்கு நடந்து அல்லது மிதிவண்டியை பயன்படுத்தும் முடிவுக்கு வந்தார். வடகை கட்டணத்தை குறைக்க, குடியிருப்பை பகிர்ந்து கொள்ளவும் தயாரானார். கூகிள் உழியர்களுக்கு கிடைக்கும் இலவச உணவுகளையே பயன்படுத்த தொடங்கினார்.
சொகுசு கார் அல்லது குடியிருப்புக்கு செலவிடும் தொகையை முதலீடுகளாக மாற்றினார். இதனால் அவரது சேமிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. வரி சலுகைகள் அளிக்கும் கணக்குகளில் ஆண்டுக்கு 75,000 டொலர்கள் வரையில் முதலீடு செய்யத் தொடங்கினார்.
சேமிப்பு மட்டும் 1 மில்லியன் டொலர்
2020ல் ஓய்வு பெறுவதற்கு போதுமான நிதியை அவர் சேமித்திருந்தார். இருந்த போதும் அமெரிக்காவிலேயே தங்கி, தமது சேமிப்பை அதிகரிக்கவே ஜார்ஜ் மற்றும் அவரது வருங்கால மனைவியும் திட்டமிட்டனர்.
2020ல் JP Morgan நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார் ஜார்ஜ். வருவாயும் சொத்து மதிப்பும் அதிகரித்த போதும், மிக எளிமையான வாழ்க்கையை முன்னெடுக்கவே ஜார்ஜ் விரும்பினார்.
அவரது 27வது வயதில் சேமிப்பு மட்டும் 1 மில்லியன் டொலராக உயர்ந்தது. 2023 ஆகஸ்டு மாதம், தனது 29வது வயதில் JP Morgan நிறுவனத்தில் இருந்து விலகினார். அத்துடன், ThirdEar AI என்ற நிறுவனத்தை இணைந்து தொடங்கினார்.
ஜார்ஜின் ஆரம்பகால முதலீடுகள், எதிர்காலத்தில் சம்பளம் பெறும் சூழல் தொடர்பில் கவலைப்படாமல் தனது ஆர்வம் மற்றும் விருப்பத்தைத் தொடர நிதி சுதந்திரத்தை அவருக்கு வழங்கியுள்ளது.
தற்போது சம்பளம் வாங்குவதைப் பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை, சொந்த நிறுவனத்தைத் தொடங்கும் அபாயத்தை என்னால் எடுக்க முடியும் என்று ஜார்ஜ் குறிப்பிடுகிறார். இதுவரையான முதலீடுகள், சேமிப்புகள் தங்கள் குடும்பத்தின் எதிர்கால செலவுகளை ஈடுசெய்யும் என்றே ஜார்ஜ் சுட்டிக்காட்டுகிறார்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |