IIT பட்டதாரி... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியைவிடவும் கோடீஸ்வரர்: இவரது சொத்து மதிப்பு
இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவியவர்களில் பரவலாக அறியப்படாத நபர்களில் ஒருவர் சேனாபதி கோபாலகிருஷ்ணன்.
நாராயண மூர்த்தி ஐந்தாவது இடம்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான கோபாலகிருஷ்ணன், தற்போது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியைவிடவும் பெரும் பணக்காரராக மாறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கோபாலகிருஷ்ணனின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ 38,500 கோடி என்றே கூறப்படுகிறது ஆனால் நாராயண மூர்த்தியின் சொத்து மதிப்பு ரூ 36,600 கோடி. பெங்களூருவில் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் நாராயண மூர்த்தி ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
தொழில் துறை வட்டாரத்தில் பரவலாக Kris என அறியப்படும் கோபாலகிருஷ்ணன் 1955ல் பிறந்தவர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடங்கிய ஆறு பேரில் இவரும் ஒருவர்.
இன்ஃபோசிஸின் ஆரம்ப கட்டத்தில், தொழில்நுட்பப் பகுதியைக் கையாளும் முக்கிய பொறுப்பு கோபாலகிருஷ்ணனுக்கு இருந்தது. அத்துடன் பிந்தைய ஆண்டுகளில் நிறுவனத்தின் வளர்ச்சியின் அடிப்படையை உருவாக்கிய நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையையும் கண்காணித்து வந்துள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கோபாலகிருஷ்ணனின் வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்வுகளும் நடந்தன. அமெரிக்காவில் தங்கியிருந்தவர் 1994ல் இந்தியா திரும்பியதன் பின்னர், அதே ஆண்டில் துணை நிர்வாக இயக்குனர் உட்பட முக்கிய பதவிகளை ஏற்றார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இன்னொரு நிறுவனரான நந்தன் நிலேகனி பதவியில் இருந்து விலகிய பிறகு 2004ல் இன்ஃபோசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரானார்.
பிரதிக்ஷா அறக்கட்டளை
1994 முதல் 2000 வரை மற்றும் மீண்டும் 2002 முதல் 2004 வரை நந்தன் நிலேகனி அந்த பொறுப்பில் இருந்து வந்தார். பின்னர் நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவிக்கு முன்னேறியதுடன் 2014 வரை பதவி வகித்தார்.
மூளைத் தொடர்பான ஆராய்ச்சிக்காக தனது மனைவி சுதாவுடன் இணைந்து பிரதிக்ஷா அறக்கட்டளையைத் தொடங்கினார். சென்னை கணிதவியல் நிறுவனத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
கோபாலகிருஷ்ணனின் கல்வித் தகுதியும் வேறு எந்தத் தொழில்சார் நபரையும் விடக் குறைவாக இல்லை. சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இயற்பியல் மற்றும் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் கோபாலகிருஷ்ணன்.
தற்போது கோபாலகிருஷ்ணன் ஆக்சிலர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |