13 நாடுகளில் சிம்பொனி இசை நிகழ்ச்சி - அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா
13 நாடுகளில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார்.
இளையராஜா
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில், மார்ச் 8 ஆம் திகதி தனது முதல் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.
அப்போல்லோ அரங்கத்தில், இளையராஜா நிகழ்த்திய சிம்பொனிஅரங்கேற்றியதை ரசிகர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.
இதை தொடர்ந்து இன்று காலை லண்டனில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
டவுன்லோட் செய்ய கூடாது
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இளையராஜா, "நீங்கள் மலர்ந்த முகத்துடன் என்னை வழியனுப்பி வைத்ததால் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள் புரிந்தான். சிம்பொனி நான்கு பகுதிகளை கொண்டது.
4 பகுதிகள் முடியும் வரை யாரும் கைதட்ட கூடாது என்பதுதான் விதிமுறை. ஆனால் நமது ரசிகர்களும் அங்கு வந்திருந்த பொதுமக்களும், ஒவ்வொரு பகுதி முடியவும் கைதட்டினார்கள்.
முதல்வர் அரசு மரியாதையோடு என்னை வரவேற்றது என் நெஞ்சை நெகிழ வைக்கிறது. இதை யாரும் டவுன்லோட் நேரடியாகக் கேட்க வேண்டும். 80 வாத்தியக் கருவிகளையும் நீங்கள் கேட்க வேண்டும்.
எனக்கு 81 வயதாகிவிட்டது, இனி இவர் என்ன செய்ய போகிறார் என நினைக்காதீர்கள். நீங்கள் நினைக்கும் அளவிற்குள் நான் இல்லை. இது ஆரம்பம் தான்.
13 நாடுகளில் நிகழ்ச்சி
இன்னும் 13 நாடுகளில் சிம்பொனி இசையை நிகழ்த்த உள்ளேன். அக்டோபர் 6ஆம் திகதி துபாய், செப்டம்பர் 6ஆம் திகதி பாரீஸ், ஜெர்மன் என வரிசையாக நிகழ்ச்சிகள் உள்ளன. தேதி குறிக்கப்பட்டு விட்டது.
நம்ம நாட்டில் நம் மக்களை இந்த இசையை கேட்க வைக்க வேண்டாமா? அதுவரை அமைதியாக இருங்கள். என் மீது மக்கள் அவ்வளவு அன்பு வைத்துள்ளார்கள். இசை கடவுள் என்கிறார்கள். ஆனால் நான் சாதாரண மனிதனை போலதான் வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.
என்னை இசைக்கடவுள் என்று சொல்லும் போது, இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிவிட்டீர்கள் என்று தான் தோன்றும். நான் பண்ணைபுரத்தில் இருந்து வெறுங்காலுடன் நடக்க தொடங்கினேன்.
இப்போதும் எனது காலிலே நிற்கிறேன். இளைஞர்கள் இதை முன்னுதாரணமாக கொண்டு அவரவர் துறைகளில் சாதிக்க வேண்டும்" என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |