இசை உலகிலேயே தனியாய் தெரிந்த அந்த குரல்... பவதாரிணியின் நினைவலைகள்!
இளையராஜாவின் வீட்டு இளவரசியும் பிரபல பாடகியுமான ‘பவதா’எனும் பவதாரிணி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.
இளையராஜா வீட்டு இளவரசியின் மறைவு
இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி இலங்கை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
புற்றுநோய்க்கு கடந்த 5 மாதங்களாக பவதாரிணி சிகிச்சை பெற்று வந்ததாவும், சமீபத்தில் ஆயுர்வேத சிகிச்சைப் பெறுவதற்காக இலங்கை சென்றடைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பின்னர் அவர் சிகிச்சை பலனிற்றி நேற்று மாலை 5.30 மணியளவில் உயிரழந்துள்ளார்.
பவதாரிணியின் நினைவலைகள்
இசை என்றாலே எந்தவொரு உயிராக இருந்தாலும் கட்டாயம் அடிமையாகிவிடும். அதிலும் ஒரு சில இசை மற்றும் ஒரு சில பாடகர்களின் குரல் பலரையும் மயக்கிவிடுது உண்டு.
அவ்வாறு அனைவராலும் அதிகமாக விரும்பப்பட்ட குரல் என்றால் அது இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரணியின் குரலாக தான் இருக்கும்.
தமிழ் இசை திரையுலகில் தனித்துவமாக தெரியும் ஒரே குரல் என்றால் அது இவருடையாக தான் இருக்கக்கூடும். அவருடைய குரலை யாராக இருந்தாலும் சரி இலகுவில் கண்டுப்பிடித்து விடுவார்கள்.
ஊக்கப்படுத்திய உறவுகள்
இசைக்குடும்பத்திலிருந்து வழர்ந்ததால் சிறுவயதில் இருந்தே இசை மீது பாரிய பற்று இருந்துள்ளது. மார்கழி மாத திருப்பாவையெல்லாம் அதிகாலை 4.30 மணிக்கே படிக்க ஆரம்பித்து விடுவாராம்.
வீட்டில் ஆண்டுதோறும் வைக்கப்படும் கொலுவிலும் இவர் பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவரது குரலை கேட்பவர்கள் எல்லாம், ‘உன் குரல் நன்றாக இருக்கிறது; தனியாகத் தெரிகிறது. நீ இன்னும் பயிற்சி எடுத்தால் சிறப்பாகப் பாடுவாய்’ என ஊக்கப்படுத்தி உள்ளனர்.
அந்த ஊக்கத்தின் காரணமாக தீவர பயிற்றி எடுத்து பாடல்களை பாடியுள்ளார். இதன் விளைவாக ‘பாரதி’ படத்தில் தேசிய விருது வாங்கும் அளவுக்கு முன்னேறினார்.
விருது வாங்கியதன் பின்னர் அவரது இனிமையான குரலில் பல பாடல்களை பாட ஆரம்பித்தார். ’ஒளியிலே தெரிவது தேவதையா’ என்ற பாடல் மூலம் இன்றும் இளையோரை ரசிக்க வைத்துள்ளார் எனலாம். அது மட்டுமின்றி ‘தாலியே தேவையில்லை’ எனப் பாடியதன்மூலம் தலைமுறை சிறுசுகளையும் கனவு காண வைத்தார்.
தந்தை இசையில் பாடினால் பயம் இருக்க தான் செய்யும்
எவ்வளவு தான் விருதுகளை வாங்கி பாடல்களை பாடி வந்தாலும், அவருடைய தந்தையின் இசையில் பாடும் போதெல்லாம் பயமாகத்தான் இருக்கும் என ஏற்கனே அழித்த ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
காரணம் என்ன என்று கேட்டபோது, ’என்ன மாதிரியான பாடல் தரப்போகிறார்கள்’ எனத் தெரியாதாம். பாடும் இடத்திற்கு சென்றால் மாத்திரமே என்ன தர போகிறார் என்று தெரியும். அதுவரையில் சற்று பரபரப்பாகத்தான் இருக்கும் என கூறியுள்ளார்.
தந்தையின் இசையில் வெளிவந்த ’என் பொம்மக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் இடம்பெற்ற ’குயிலே.. குயிலே குயிலக்கா’ என்ற பாடலைத்தான் முதலில் பாடியுள்ளார்.
இசையுலவை விட்ட பிரிந்த பவதாரிணி
ஒரு முறை பியானோ வாசித்து தனது தந்தையை கேட்க செய்துள்ளார். அதை கேட்ட இசைஞானி ஹே இது நல்லா இருக்கு’ என மனந்திறந்து பாராட்டியுள்ளார்.
பவதாரிணி இசையமைத்த படத்திற்கான பாடலைக் காண்பித்த போதிலும், ‘இந்த டியூனும் நன்றாக இருக்கிறது’ எனப் பாராட்டியுள்ளார்.
இவ்வாறு தனது தந்தையிடம் பலமுறையில் பாராட்டு பெற்றுள்ளார். இவரை தேடி வரும் இயக்குநர்களின் சில படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இவர் எப்போதும் தனது குரலால் மாத்திரமே அனைவரையும் கவர்ந்தால் என கூறமுடியாது. எப்போதுமே தனது புன்னகை நிறைந்த முகத்தாலும் அனைவரையும் வசீகரிப்பார்.
இவ்வாறு பல பெருமைகளைப் பெற்ற இவர் இன்று இசையுலகை விட்டே பிரிந்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |