மகளை தேடி ஓடிய இளையராஜா - இலங்கை வைத்தியசாலையில் நடந்தது என்ன?
இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
பவதாரிணி மரணம்
இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி இலங்கை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 47வது வயதில் உயிரிழந்துள்ளார்.
புற்றுநோய்க்கு கடந்த 5 மாதங்களாக பவதாரிணி சிகிச்சை பெற்று வந்ததாவும், சமீபத்தில் ஆயுர்வேத சிகிச்சைப் பெறுவதற்காக இலங்கை சென்றடைந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை 5.20 மணியளவில் பவதாரிணி உயிரிழந்துள்ளார்.
முதற் கட்டத்தில் கடுமையான வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளதாகவும். அதற்கு பித்தப்பையில் கல் இருப்பதாக சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது. அதன்படியே பித்தப்பையில் கல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சிகிச்சை பெற்று வரும்போது தான் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டத்தில் புற்றுநோயை கண்டுப்பிடித்து விட்டால் இலகுவாக சரி செய்து விடலாம். ஆனால் 3 ஆம் கட்டத்தை தாண்டி விட்டால் மிக கடினம். இவருக்கோ 4 ஆம் கட்டத்தை கடந்துள்ளது.
கல்லீரல் புற்றுநோய்தான் இறுதியில் அவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
தந்தையான இசைஞானி இளையராஜா கலைநிகழ்ச்சி காரணமாக புதன்கிழமை(24) இலங்கை சென்றுள்ளார். மகளின் மரண செய்தியை கேள்விப்பட்டதும் இளையராஜா உடைந்து போய் ஓடி சென்றுள்ளார்.
மகளை தேடி ஓடிய இளையராஜா
தனது மகள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த வைத்தியசாலையில் அவர் தடுமாறி செல்லும் ஒரு சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானி அவர்களுக்கும், பவதாரணி அவர்களின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |