இளையராஜா மகள் பவதாரிணியின் இறுதி கால போராட்டம்: கடைசி நேரத்தில் தெரியவந்த உண்மையான பாதிப்பு
இளையராஜா மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், கடைசி காலத்தில் அவரின் உடல்நிலை மோசமடைந்தற்கான காரணம் தெரியவந்துள்ளது.
மறைந்தார் பவதாரிணி
இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி(47) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
புற்றுநோய்க்கு கடந்த 5 மாதங்களாக பவதாரிணி சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்று இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மருத்துவ சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை 5.20 மணியளவில் பவதாரிணி உயிரிழந்துள்ளார்.
அவரது தந்தை இளையராஜா ஏற்கனவே இலங்கையில் இருக்கும் நிலையில், அவரது சகோதரர் யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா இலங்கைக்கு புறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடைசி கால போராட்டம்
பாடகி பவதாரிணிக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவருக்கு பித்தப்பை சிகிச்சை வழங்கப்பட்டதோடு, அவரது பித்தப்பையில் இருந்து கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது தான் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவற்றில் துரதிஷ்டமான விஷயம் என்னவென்றால் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் 4வது நிலையில் இருந்துள்ளது.
பொதுவாக 1ம் நிலை புற்று நோய்களை எளிதாக சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடமுடியும், 3 வது நிலையை தாண்டினால் தான் புற்று நோயாளியை குணப்படுத்துவது மிகவும் கடினம், இதில் அவருக்கு 4வது நிலை கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்ததால் அதுவே அவரது மரணத்திற்கு மிகப்பெரிய காரணமாக மாறிவிட்டது.
பவதாரிணியின் திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
ilaiyaraaja, bhavatharini, Singer bhavatharini, Tamil, Tamil cinema, liver cancer, cancer