கடவுளை பற்றிய கமல் ஹாசனின் பார்வை! மேடையிலேயே விமர்சித்த இளையராஜா
கடவுள் குறித்து நடிகர் கமல்ஹாசனின் கருத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜாவின் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.
கடவுளை பற்றி கமலின் கருத்து
நீண்ட காலமாக உலகத்தில் இருக்கும் பெரிய கேள்வி என்னவென்றால் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது தான். இதனை பற்றி யோசித்தால் முதலில் நினைவுக்கு வருவது நடிகர் கமல் ஹாசன் தான்.
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று அவரிடம் கேட்டால், "இருந்தால் நல்லா இருக்கும். இவருதான் கடவுள் அப்டினு கண்ணு முன்னாடி காட்டுங்க நான் நம்புறேன்" என்பது தான் கடவுளை பற்றி அவரது பார்வை. இவரின் கருத்துக்கு இளையராஜா கூறிய பதில் கருத்தை நினைவு கூறலாம்.
இளையராஜா பேசியது
யுவன் ஷங்கர் ராஜா தனது தந்தையிடம் நிகழ்ச்சி ஒன்றில் கடவுளை நீங்கள் பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர், "எனக்கு கடவுளிடம் கேட்பதற்கு ஒன்றும் இல்லை. எனக்கு அவர் கஷ்டத்தை கொடுத்தால் நான் கஷ்டப்படுறத பார்த்து நீ சந்தோஷமா இருக்கியா, அது போதும்னு எடுத்துப்பேன். நம் மனசு தான் கடவுள். அதை நம்மால் பார்க்க முடியாது.
நமக்கு அறிவு இருக்குனு தெரிகிறது. ஆனால், கண்ணால் அதை பார்க்க முடியாது. அதே போல அறிவால் உணரக்கூடிய கடவுளை கண் முன் தோன்ற வேண்டும் என்று கேட்பது கமல்ஹாசன் கேட்பது போல் இருக்கிறது.
என்னை மேடையில் வைத்துக்கொண்டு இவரை கடவுள் என்று சொல்லுங்கள் நம்புகிறேன் என்று அவர் சொல்கிறார். கடவுள கண்ணால காட்டுனா மட்டும்தான் நம்புவியா? உனக்கு அறிவு இருக்கிறதா என்று கேட்டால் அதை வைத்து அறிவு இருக்கிறது என்று சொல்லுவ?
அறிவையே எதிரில் பார்க்க முடியாத போது கடவுளை பார்க்கக் கூடிய ஒரு விஷயம் இல்லை.அறிவே கடவுள். அன்பே கடவுள்.
எனக்கு கடவுள் என்றால் அது பகவான் ரமண மகரிஷிதான். அவர் எனக்குள் இருக்காரு. இங்க இருக்க ஒவ்வொருத்தர் உள்ளேயும் அவர் இருக்கார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |