கர்த்தர் பெயரில் கொள்ளை! ஜெபக்கூட்டத்தில் நகைகளை கேட்ட பெண்ணிற்கு ஜேம்ஸ் வசந்தன் கண்டனம்
கர்த்தருடையை பேரையும், வேத வசனங்களையும் கொள்ளையில் சேர்க்கிறார்கள் என பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபல இசையமைப்பாளராக மாறிய ஜேம்ஸ் வசந்தன் அரசியல், சினிமா, மதங்களை வைத்து பேசுபவர்கள் எல்லோரையும் விமர்சித்து வருவார்.
அண்மையில் கூட நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் பெயருக்கு கருத்து தெரிவித்தார். மேலும், கிறிஸ்தவ போதகரான பால் தினகரனின் மனைவி இவாஞ்சலின் பேசிய சுவிஷேச வீடியோவுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
ஜெபக்கூட்டம்
இந்நிலையில், மீண்டும் ஒரு சுவிசேஷ வீடியோவை குறிப்பிட்டு ஜேம்ஸ் வசந்தன் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் பெண் ஒருவர் ஜெபக்கூட்டத்தில் பங்கேற்றவர்களின் நகைகளை எல்லாம் கேட்டும், அதனை ஆறே மாதத்தில் தேவன் இரட்டிப்பாக தருவார் என்ற ரீதியில் பேசும் விதமாக உள்ளது.
ஜேம்ஸ் வசந்தன் கருத்து
இந்த வீடியோவை பகிர்ந்த ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பதிவில், "இந்த அம்மா மேல வர்ற கோபத்தைவிட அங்க உக்காந்துருக்குதுங்க பாருங்க ஒரு கூட்டம். அதுங்க மேலதான் அதிகக் கோபம் வருது. இதுங்கதான் இந்தமாதிரி ஏமாத்துக்காரப் பசங்களை வளர்த்துவிடுதுங்க.
இந்த அம்மா இப்படி பேசுறதுக்குக் காரணம் சில நட்சத்திர சுவிசேஷகர்தான். அவங்க அப்படி பேசுனதுக்கு அப்புறம் ரொம்ப பிரலமாயிட்டாங்க. அதனால் மக்கள் இப்படிப் பேசுறவங்களைத்தான் ரொம்ப விரும்புறாங்கன்னு தெரிஞ்சு, மோசடிகளை வெளிப்படையாகவே உரிமையோட செய்யத் தொடங்கிட்டாங்க.
இதுல வருத்தத்துக்குரிய விஷயம் என்னன்னா, கர்த்தருடையை பேரையும், வேத வசனங்களையும் இந்தக் கொள்ளையில் சேத்துக்குறதுதான். பிற நம்பிக்கைகளிலிருந்து உண்மையான மனமாற்றத்துடன் வருகிற பலரும் இதை நம்பி மோசம் போவது அதைவிட வேதனை.
அரசியலில்தான் ஏமாத்துக்காரர்கள்னு பாத்தா கிறிஸ்தவத்தில் அவர்களை மிஞ்சிவிடுகிறார்கள் பல கள்ளப் போதகர்கள். இதை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தது யாரென்று நம் எல்லோருக்கும் தெரியும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |