உலகின் டாப் 20 அழகான கடற்கரைகள் பட்டியலில் இடம்: ஆனால் அங்கு செல்லமுடியாது
பிரான்சின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டனியில் ஒரு அழகான கடற்கரை உள்ளது.
ஆனால், அந்தக் கடற்கரைக்குச் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி கிடையாது!
அழகான கடற்கரைகள் பட்டியலில் இடம்
Hellotickets என்னும் இணையதளம் வெளியிட்டுள்ள உலகின் டாப் 20 அழகான கடற்கரைகள் பட்டியலில் பிரிட்டனியில் உள்ள Île Vierge ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆனால், சுற்றுலாப்பயணிகள் அங்கு செல்லமுடியாது. காரணம் என்னவென்றால், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் அந்த கடற்கரை மூடப்பட்டுள்ளது.
அந்த பகுதிக்கு சுற்றுலா செல்லும் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள், அங்குள்ள மலைமுகடுகளில் ஏறுவதால் பாறைகள் பெயர்ந்துவிழும் அபாயம் உள்ளதாலேயே அங்கு செல்ல தடை அறிமுகம் செய்யப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
அத்துடன், தடைக்கு முன் அங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் சென்றதால் அப்பகுதியிலுள்ள மண்ணும் தாவரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆக, Île Vierge கடற்கரையை, அனுமதிக்கப்பட்ட பகுதிகளில், தொலைவிலிருந்து மட்டுமே பர்வையிடமுடியும்.
தடையை மீறுபவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்பது முக்கியமான தகவல்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |