ஆறு முறை நாடு கடத்தப்பட்ட புலம்பெயர் நபர்: பின்னணியை ஆராய்ந்து சிறையில் தள்ளிய பிரித்தானியா
ஏழு ஆண்டுகளில் ஆறு முறை நாடு கடத்தப்பட்ட ருமேனியாவை சேர்ந்த சட்டவிரோத புலம்பெயர் நபர் மீண்டும் பிரித்தானியா திரும்பிய நிலையில், தற்போது சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு சிறை
குறித்த நபர் திருட்டு, ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 2 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 44 வயதான நிகு மரின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிகாரம் மிக்க இரு நீதிபதிகளால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5 பிள்ளைகளுக்கு தந்தையான நிகு மரின் லீட்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பின் மொட்டைமாடியில் தங்கியிருந்துள்ளார்.
@shutterstock
இந்த நிலையில் சிறை தண்டனை காலம் முடிந்ததும் 7வது முறையாக அவர் நாடு கடத்தப்படுவார் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே பிரித்தானியாவில் போதுமான குற்றவாளிகல் இருப்பதாக குறிப்பிட்ட லீட்ஸ் கிரவுன் நீதிபதி, இனி பிரித்தானியா திரும்பும் எண்ணமிருந்தால் அதை கைவிட வேண்டும் என எச்சரித்துள்ளார்.
நாடு கடத்தப்படுவார்
இதுவரை 6 முறை நாடு கடத்தப்பட்டதன் பின்னணியை புரிந்து கொண்டு, இனி பிரித்தானியா திரும்புவதை தவிர்க்க வேண்டும் என நீதிபதி கோரியுள்ளார். மேலும், இனி ஒருமுறை பிரித்தானியா திரும்பும் நிலை ஏற்பட்டால், தண்டனை காலமும் நீளும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
2015 அக்டோபர் மாதம் முதன்முறையாக நாடுகடத்தப்பட்ட மரின் அதன் பின்னர் ஆண்டுக்கு ஒருமுறை நாடுகடத்தப்படுவதும் திரும்புவதுமாக தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.