அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்: போதையில் செய்த பயங்கர விபத்து: வீடியோ
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர் கலிபோர்னியாவில் செய்த லொறி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கலிபோர்னியாவில் பயங்கர விபத்து
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய ஜஷன்ப்ரீத் சிங்(Jashanpreet Singh) என்ற 21 வயது இந்தியர் தெற்கு கலிபோர்னியாவில் நிகழ்த்திய பயங்கரமான சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்து இருப்பதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
ஜஷன்ப்ரீத் சிங் போதைப்பொருள் எடுத்துக் கொண்டு வாகனம் இயக்கி மூவர் உயிரிழந்துள்ள நிலையில், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி மூவரை படுகொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ILLEGAL ALIEN TRUCK DRIVER ARRESTED: Dashcam captures a semi slamming into traffic on WB I-10 in Ontario, CA, killing 3 and injuring several.
— One America News (@OANN) October 23, 2025
Subscribe to OAN LIVE for more updates https://t.co/Ci8c350hE1
CHP says 21-year-old Jashanpreet Singh, said to be an illegal alien from… pic.twitter.com/SpLFxMZAiu
சான் பெர்னார்டினோ மாகாண நெடுஞ்சாலையில் I-10 ஃப்ரீவே-யில் நிகழ்ந்த இந்த பயங்கரமான விபத்தின் காட்சிகள் டேஷ் காம்(Dash Cam) கேமராவில் பதிவாகியுள்ளது.
அதில், ஜஷன்ப்ரீத் சிங் ஓட்டி வந்த பெரிய லொறி ஒரு SUV கார் மீது மோதுவதும், பின்னர் அது உடனடியாக தீப்பிடித்து எரிவதையும் பார்க்க முடிகிறது.
இந்த விபத்தின் போது ஜஷன்ப்ரீத் சிங் லொறியில் பிரேக்(Brake) அழுத்தவில்லை என்றும், போதைப்பொருளின் மயக்கத்தில் இருந்ததாகவும் பொலிஸார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
குடியேற்ற விசாரணைக்காக விடுவிக்கப்பட்ட ஜஷன்ப்ரீத் சிங்
ஜஷன்ப்ரீத் சிங் கடந்த 2022ம் ஆண்டு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது, கலிபோர்னியாவின் எல் சென்ட்ரோ பகுதியில் எல்லை ரோந்து படையினரால் கைது செய்யப்பட்டார்.
BREAKING: Per multiple ICE sources, Jashanpreet Singh, the semi-truck driver suspected of killing three people in a DUI crash on the 10 freeway in Ontario, CA yesterday, is an Indian illegal alien who was caught & released at the CA border by the Biden admin in March 2022. DHS… pic.twitter.com/ewxt7ZGfJs
— Bill Melugin (@BillMelugin_) October 23, 2025
பின்னர் அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் “தடுப்பு காவலுக்கு மாற்றான வழிகள்” என்ற சட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டு, குடியேற்ற விசாரணைகளுக்காக நாட்டில் காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |