இலங்கையில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்பு: 65 வயது சாரதி அதிரடி கைது
இலங்கையில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்பு
நுவரெலியாவில் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் சாரதி அலுவல் இல்லத்தில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த ஓய்வு பெற்ற சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்பது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் இறுதியில் ஓய்வு பெற்ற சாரதி இன்று(19/03/2026) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர், கட்டிடத்தின் சமையலறையில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்தும், நண்பர்களுக்கு விநியோகம் செய்தும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சட்டவிரோதமான மதுபானம் பறிமுதல்
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 50,000 மில்லிலிட்டர் கோடா மற்றும் பல்வேறு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காக நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் 65 வயதான சந்தேக நபர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |