தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராய மரணம்.., விழுப்புரத்திலும் ஒருவர் உயிரிழப்பு
தமிழக மாவட்டமான விழுப்புரத்தில் கள்ளச் சாராயம் குடித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கள்ளச்சாராய மரணம்
தமிழக மாவட்டமான விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது.
இதனை குடித்த உள்ளூரைச் சேர்ந்த ஜெயராமன் (65) மற்றும் 2 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று காலை ஜெயராமன் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். அவரின் உடலானது பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கடந்த மாதம் 19-ம் திகதி மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர்.
இதனால் கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |