டி20 உலகக் கிண்ணத் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்பப்பெற்ற வீரர்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுள்ளார்.
இமாத் வாசிம்
பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் வீரர் இமாத் வாசிம் (Imad Wasim) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடினார். அந்தத் தொடரில் அவர் விளையாடிய இஸ்லாமாபாத் அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
இமாத் வாசிம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் 19 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். PSL சீசன் முழுவதும் அவர் சிறப்பாக செயல்பட்டு 126 ஓட்டங்களும், 12 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
PCBக்கு நன்றி
இந்த நிலையில் 2024 டி20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாட தனது விருப்பத்தை அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''PCB அதிகாரிகளை சந்தித்ததைத் தொடர்ந்து, எனது ஓய்வை மறுபரிசீலனை செய்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும், 2024 ஐசிசி டி20 உலகக் கிண்ணத்திற்கு வழிவகுக்கும் டி20 இன்டெர்நேஷ்னல் வடிவத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நான் இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்ததற்காக PCBக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் எனது நாட்டிற்கு விருதுகளைக் கொண்டு வருவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் வழங்குவேன். முதலில் பாகிஸ்தான்!'' என தெரிவித்துள்ளார்.
35 வயதாகும் இமாத் வாசிம் 55 ஒருநாள் போட்டிகளில் 986 ஓட்டங்களுடன் 44 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதேபோல் 66 டி20 போட்டிகளில் 486 ஓட்டங்களுடன் 65 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |