தூக்கம் மறந்த 8 ஆண்டுகள்... கடின உழைப்பு: விவாதங்களை புறந்தள்ளிய தங்க மங்கை
அல்ஜீரியாவின் குத்துச்சண்டை வீராங்கனை Imane Khelif தனது பாலினம் தொடர்பில் எழுந்த அனைத்து விவாதங்களையும் புறந்தள்ளி பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார்.
ஒட்டுமொத்த அல்ஜீரியாவும்
நீண்ட 8 ஆண்டுகள் தூக்கத்தை மறந்து கடினமாக உழைத்ததன் பலனாகத்தான் பாரீஸ் ஒலிம்பிக்கில் தாம் தங்கம் வென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது எனது கனவு, தற்போது தாம் மகிழ்ச்சியாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார் 25 வயதான Imane Khelif.
எனது குடும்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அல்ஜீரியாவும் தற்போது மகிழ்ச்சியில் உள்ளது என்றார். சீனாவின் Yang Liu என்பவரை 5-0 என்ற புள்ளியில் வெற்றி கண்டு தங்கம் வென்றுள்ளார் Imane Khelif.
பாரீஸ் ஒலிம்பிக் களத்தில் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு சுற்றிலும் Imane Khelif ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஆனால் இத்தாலியின் Angela Carini என்பவருடன் வெறும் 46 நொடிகளில் பெற்ற வெற்றி என்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
பாலினம் தொடர்பில் கேள்வி
Khelif-ன் ஒவ்வொரு குத்தும் தமக்கு கடுமையான வலியை ஏற்படுத்தியது என வெளிப்படையாகவே Angela Carini குற்றஞ்சாட்டினார். பொதுவாக பெண்களால் அவ்வாறு வலுவுடன் குத்துவிட முடியாது என்றும் Angela Carini விளக்கமளித்தார்.
அதுவரை Khelif-ன் பாலினம் தொடர்பில் புகைந்து வந்த தகவல், சர்வதேச அளவில் பூதாகரமாக வெடித்தது. டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்டவர்கள் Khelif-ன் பாலினம் தொடர்பில் கேள்வி எழுப்பும் நிலையும் ஏற்பட்டது.
தொடர்ந்து Angela Carini திடீரென்று தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கோரினார். ஆனால் டெல்லியில் நடந்த உலக சேம்பியன் குத்துச்சண்டையில் பாலினம் தொடர்பில் நிரூபிக்க முடியாததால், Imane Khelif போட்டிகளில் களமிறங்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |