இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு IMF 1 பில்லியன் டொலர் நிதியுதவி
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, சர்வதேச நாணய நிதியம் (IMF) $1 பில்லியன் நிதியை உடனடியாக வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம், தற்போது வரை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை 2.1 பில்லியன் டொலராக உள்ளது.

பாகிஸ்தானின் முயற்சி படுதோல்வி: ட்ரோன் தாக்குதலில் இருந்து ஸ்ரீநகர், அவந்திபோரா விமான தளம் பாதுகாக்கப்பட்டது
இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்தியா, இந்த நிதி பாகிஸ்தான் அரசு மற்றும் அதன் ராணுவம் மீது கட்டுப்பாடின்றி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படலாம் என கூறி, வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இந்தியாவின் எதிர்ப்பை எலிதாக ஒதுக்கி, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் “இந்திய தண்டனை முயற்சி தோல்வியடைந்தது” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் இந்திய மாநிலங்களான ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகியவற்றின் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயுதம் ஏந்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
பஞ்சாபில் உள்ள ஃபிரோஸ்பூரில், ஒரு குடியிருப்புப் பகுதியில் ட்ரோன் தாக்குதலால் மூன்று பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
இந்திய விமான எதிர்ப்பு அமைப்புகள், குறிப்பாக Akash மற்றும் C-UAS போன்ற உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அமைப்புகள், பெரும்பாலான தாக்குதல்களை முறியடித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
IMF Pakistan loan 2025, India protest IMF bailout, Terror funding Pakistan, Operation Sindoor, India Pakistan conflict 2025, IMF Extended Fund Facility Pakistan, Pahalgam terror attack, Cross-border terrorism India Pakistan, Pak drone attacks India, Shehbaz Sharif IMF bailout