அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கம் - ஆணுறை விலையை குறைக்க கெஞ்சும் பாகிஸ்தான்
ஆணுறை வரியை ரத்து செய்ய பாகிஸ்தான் வைத்த கோரிக்கையை IMF நிராகரித்துள்ளது.
அதிகரிக்கும் மக்கள் தொகை
பாகிஸ்தான், கடந்த சில ஆண்டுகளாக மோசமான பொருளாதார சூழலை எதிர்கொண்டு வருகிறது.

IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் பல பில்லியன் டொலர்களை கடனாக பெற்றே பாகிஸ்தான் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த கடனுக்காக, வரி வசூல், நிர்வாகம் என பல்வேறு கடுமையான நிபந்தனைகளை IMF பாகிஸ்தானுக்கு விதித்துள்ளது.
அதேவேளையில், பாகிஸ்தானின் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது. 2.55 சதவீதத்துடன், ஆண்டொன்றுக்கு 60 லட்சம் பேர் என்ற அளவில் பாகிஸ்தானில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.

மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த பாகிஸ்தான், ஆணுறை போன்ற குழந்தை பிறப்பை தடுப்பு சாதனங்கள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க திட்டமிட்டது.
ஆணுறை ரத்து செய்ய குறைக்க கோரிக்கை
இதற்காக, பிறப்பு கட்டுப்பாட்டுப் பொருட்கள் மீதான 18 சதவீத விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் IMF அமைப்பிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் இந்த கோரிக்கையை IMF நிராகரித்துள்ளது.

தற்போதைய கடன் திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டின் நடுப்பகுதியில் வரி விலக்குகளை வழங்க முடியாது. வரிவிதிப்பில் மாற்றங்கள் ஏதேனும் இருந்தால், அடுத்த 2026–27க்கான பட்ஜெட் திட்டமிடலின் போது மட்டுமே விவாதிக்க முடியும் என IMF அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார்.
ஆணுறைகளுக்கான வரியை நீக்குவதன் மூலம் மட்டும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ரூ.400 மில்லியன் முதல் ரூ.600 மில்லியன் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சானிட்டரி பேட்கள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்கள் மீதான வரியை குறைப்பதற்கான பரிந்துரையையும் IMF நிராகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |