ஜேர்மனிக்கு பல மில்லியன் யூரோக்கள் வருவாய் உருவாக்கும் புலம்பெயர்ந்தோர்: ஆனால்
புலம்பெயர்ந்தோர் ஜேர்மனிக்கு பல மில்லியன் யூரோக்கள் வருவாய் உருவாக்குவதாக சமீபத்திய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அச்சத்தை உருவாக்கியுள்ள செய்தி
கிழக்கு ஜேர்மனியில், விரைவில் மாகாண தேர்தல்கள் நடைபெற உள்ளன.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள், Alternative for Germany (AfD) என்னும் கட்சி தேர்தல்களில் பெரும் வெற்றி பெரும் என தெரிவித்துள்ளன.
விடயம் என்னவென்றால் AfD கட்சி, புலம்பெயர்தல் எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட வலதுசாரிக் கட்சி ஆகும்.
அக்கட்சியினர், தொடர்ந்து புலம்பெயர்ந்தோர் மீது தாக்குதல்கள் நடத்திவருகிறார்கள். ஆகவே, தேர்தல்களில் அக்கட்சி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளதால், புலம்பெயர்ந்தோர் அச்சம் அடைந்துள்ளனர்.
ஜேர்மனிக்கு பல மில்லியன் வருவாய் உருவாக்கும் புலம்பெயர்ந்தோர்
விடயம் என்னவென்றால், கிழக்கு ஜேர்மனிக்கு பெருமளவில் வருவாய் உருவாக்குவதே இந்த புலம்பெயர்ந்தோர்தான்.
2023ஆம் ஆண்டில், ஜேர்மனியின் ஐந்து கிழக்கு மாகாணங்களுக்கு, 403,000 வெளிநாட்டுப் பணியாளர்கள் பணிக்கு வந்துள்ளார்கள். அவர்கள் மட்டுமே அம்மாகாணங்களுக்கு 24.6 மில்லியன் யூரோக்கள் வருவாய் உருவாக காரணமாக அமைந்துள்ளார்கள். அது, கிழக்கு ஜேர்மனியின் மொத்த உற்பத்தியில் சுமார் 5.8 சதவிகிதமாகும்.
அவர்கள் கிழக்கு ஜேர்மனிக்கு புலம்பெயராதிருப்பார்களானால், அங்கு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்.
ஆக, புலம்பெயர்ந்தோர் ஜேர்மனிக்கு அத்தியாவசியமானவர்கள், தவிர்க்க முடியாதவர்கள் என்கிறது இது தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட ஆய்வமைப்பு ஒன்று.
ஆனால், புலம்பெயர்தல் எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட கட்சி கிழக்கு ஜேர்மனியில் பதவிக்கு வரலாம் என வெளியாகியுள்ள தகவல், அப்பகுதிக்கு வருவாயை ஈட்டித்தரும் புலம்பெயர்ந்தோருக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது துரதிர்ஷ்டவசம்தான் என்பதை மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |