பிரான்சில் வாழ்பவர்களில் புலம்பெயர்ந்தோர் எவ்வளவு பேர்? பத்து ஆண்டுகளில் முதல் ஆய்வு
பிரான்சில் வாழ்பவர்களில் பத்தில் ஒருவர் வெளிநாட்டவர் என தேசிய புள்ளியியல் ஏஜன்சி தெரிவித்துள்ளது.
பத்து ஆண்டுகளில் முதல் ஆய்வு
பிரான்ஸ் தேசிய புள்ளியியல் ஏஜன்சி நேற்று பிரான்சில் வாழ்பவர்களில் புலம்பெயர்ந்தோர் எவ்வளவுபேர் என்பதைக் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் முதன்முறையாக புலம்பெயர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து, இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2021ஆம் ஆண்டு நிலவரப்படி, பிரான்ஸ் மக்கள்தொகையில், பத்தில் ஒருவர், அதாவது. 10.3 சதவிகிதத்தினர், புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்கள் ஆவர்.
Immigrants now make up 10 percent of France's population, says Statistics agency https://t.co/TMMgG2NLZH pic.twitter.com/OgVOEiu76M
— FRANCE 24 English (@France24_en) March 31, 2023
பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்கள்
2021இல், பிரான்சில் வாழும் புலம்பெயர்ந்தோரில் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமானவர்கள் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றுள்ளார்கள்.
புலம்பெயர்ந்தோரும் அவர்களுடைய சந்ததியாரும் பெருமளவில் பிரான்ஸ் மக்களோடு ஒன்றரக் கலந்துவிட்ட நிலையில், அவர்களில் பலருடைய பிள்ளைகள் பிரான்சில் பிறந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு தெற்கு ஐரோப்பாவிலிருந்தே பெருமளவில் புலம்பெயர்ந்தோர் பிரான்ஸ் வந்த நிலையில், 2021ஐப் பொருத்தவரை, புலம்பெயர்ந்தோர் பலர் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா நாட்டவர்கள் என்கிறது அந்த ஆய்வு.
FRANCE 24 English