படுகொலை செய்யப்படலாம்... தென் கொரிய ஜனாதிபதி தொடர்பில் வெளியாகும் புதிய தகவல்
தென் கொரியாவில் திடீரென்று இராணுவச் சட்டத்தை அறிவித்து, அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ள ஜனாதிபதி யூன் பதவி நீக்கத்தை எதிர்கொள்ள இருக்கிறார்.
சிறை தண்டனை
ஆனால் தென் கொரியாவைப் பொறுத்தமட்டில், ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு முன்னரும் பல தலைவர்கள், நாட்டில் அரசியல் நெருக்கடியை உருவாக்கி, பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது சிறை தண்டனையை எதிர்கொண்டுள்ளனர்.
சிலர் படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர். தென் கொரியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவர் Park Geun-hye. இவர் கடந்த 2016ல் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.
முன்னாள் சர்வாதிகாரியான Park Chung-hee என்பவரின் மகளான இவர் 2013 முதல் ஆட்சிக்கு வந்தார். தம்மை கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என அடையாளப்படுத்தி வந்த இவர், பல மில்லியன் டொலர் ஊழல் வழக்கில் சிக்கினார்.
2017 மார்ச் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டு, தொடர்ந்து 20 ஆண்டுகள் சிறை தண்டனைக்கும் விதிக்கப்பட்டார். ஆனால் ஜனாதிபதி Moon Jae-in என்பவரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டார்.
இதில், Park Geun-hye மீதான ஊழல் வழக்கை முன்னெடுத்து அவரை சிறைக்கு அனுப்ப காரணமானவர், அப்போதைய சட்டத்தரணியான தற்போதைய ஜனாதிபதி யூன் சுக் இயோல் என்பது கூடுதல் தகவல்.
Park Geun-hye-வுக்கு முன்பு ஜனாதிபதியாக பொறுப்பில் இருந்தவர் Lee Myung-bak. இவரும் ஊழல் வழக்கில் சிக்கி 2018 அக்டோபர் மாதம் 15 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார். ஆனால் 2022 டிசம்பர் மாதம் ஜனாதிபதி யூன் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.
கொடூரமான ஜனாதிபதி
2003 முதல் 2008 வரையில் தென் கொரிய ஜனாதிபதியாக இருந்தவர் Roh Moo-hyun. சுமார் 6 மில்லியன் டொலர் லஞ்சம் வாங்கியதாக விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில், 2009 மே மாதம் ஒரு குன்றிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தென் கொரியாவின் மிகவும் கொடூரமான ஜனாதிபதியாக அறியப்பட்டவர் Chun Doo-hwan. இவர் Gwangju விவகாரத்தை மிகவும் கொடூரமாக ஒடுக்கியவர். 1987ல் நாடு தழுவிய மக்கள் போராட்டங்களால் பதவி துறந்தார்.
ஆனால் தமக்கு நெருக்கமான இராணுவ அதிகாரியான Roh Tae-woo என்பவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார். 1996 ல், சுன் மற்றும் ரோஹ் இருவரும் 1979 ஆட்சிக் கவிழ்ப்பில் தங்களின் நடவடிக்கைகளுக்காக தேசத்துரோக குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
சுனுக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் அவரது தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ரோஹ் 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது 17 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
இருப்பினும் இரண்டு வருடங்கள் மட்டுமே சிறைவாசம் அனுபவித்த பின்னர் 1998 ல் இருவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. தென் கொரியாவி சர்வாதிகாரியாக அறியப்பட்டவர் ஜனாதிபதி Park Chung-hee. தனது உளவுத்துறை தலைவரால் 1979 அக்டோபர் 26ம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
Park Chung-hee படுகொலை செய்யப்பட்டதை வாய்ப்பாக பயன்படுத்திய Chun Doo-hwan மற்றும் Roh Tae-woo ஆகிய இரு இராணுவ தளபதிகளும் 1979 டிசம்பர் மாதம் சதிச் செயலுக்கு திட்டமிட்டனர்.
இது தென் கொரிய அரசியலை மேலும் நெருக்கடிக்கு தள்ளியது. 1961ல் ஜனாதிபதி Yun Po-sun என்பவரது ஆட்சியை இராணுவ தளபதியான Chun Doo-hwan என்பவர் சதியால் கவிழ்த்தார். இருப்பினும் அரசாங்கத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் கைப்பற்றிய Chun Doo-hwan, ஜனாதிபதியாக Yun Po-sun தொடர அனுமதித்தார்.
தென் கொரியாவின் முதல் ஜனாதிபதியான சிங்மேன் ரீ, 1960 ல் மாணவர்களால் நடத்தப்பட்ட மாபெரும் எழுச்சியின் காரணமாக ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தேர்தல் மோசடியால் தனது பதவிக் காலத்தை நீட்டிக்க ரீ மேற்கொண்ட முயற்சி காரணமாக மாணவர்களின் எதிர்ப்புகளுக்கு இலக்கானார். பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் ஹவாய் தீவுக்கு நாடுகடத்தப்பட்டார்.
1965ல் அவர் இறக்கும் வரையில் ஹவாய் தீவில் வசித்து வந்தார். தற்போது ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கும் இதுபோன்ற ஒரு நெருக்கடி ஏற்படலாம் என்றே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |