மார்ச்17 உலக தூக்க தினம்! கொண்டாடப்பட காரணம் ?
தூக்கம் என்பது ஒரு மனிதனின் வாழ்வின் முக்கிய அங்கமாக காணப்படுகிறது.
தூக்கம் இல்லாத மனிதன் தனது வாழ்நாளை சீக்கிரமே கழித்து விடுகிறான்.
ஒரு நாளைக்கு 6 அல்லது 7 மணி நேரமாவது தூங்கவேண்டும்.
தூக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் தூக்கமின்மையால் ஏற்படும் நோய்கள் என்பவற்றை கருத்திற்கொண்டு 2008ஆம் ஆண்டு World Sleep Societyயினால் கொண்டாடப்படுகிறது.
ஒரு நல்ல தூக்கத்திற்கு பலவிதமான உள ரீதியான காரணிகளும் புறச்சூழல் காரணிகளும் பங்களிப்பு செலுத்துகின்றன.
அமைதியான சூழல், மெல்லிய இசைகள், யோசனைகளற்ற ஒரு மனநிலை, சில வேளைகளில் ஒழுங்காக இரவு உணவு எடுத்துக்கொள்ளாவிட்டாலும் கூட தூக்கம் பாதிக்கப்படுகிறது.
தூக்கத்திற்கான இன்றைய ஆண்டின் கருப்பொருள்
ஒவ்வொரு ஆண்டும் தூக்கத்திற்கான ஒரு கருப்பொருள் இருக்கும்.
அது போல இந்த வருடத்திற்கான கருப்பொருள் என்னவெனில் "தூக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாகும்" என்பதாகும்.
தூக்கத்தின் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் !
நமது உடலின் அமைப்பு ஒரு கடிகார அமைப்பில் செயற்படுமாம் அதனை circadian rhythm என கூறுகின்றனர்.
அந்த கடிகார அமைப்பின்படி நாம் சரியான நேரத்தில், அதாவது இரவு உணவு உண்ட பின் இரண்டு மணி நேரத்தில் உறங்குவது மிக சிறந்தது.
அதன்படி தூங்கி எழும்பினால் மறுநாள் புத்துணர்ச்சியாகவும் நல்ல ஒரு மனநிலையோடும் நாளை தொடங்க முடியும். நீங்கள் சோர்வடைவதால் நாள் முழுவதும் அடினோசின் அளவு அதிகரிக்கிறது, பின்னர் தூக்கத்தின் போது உடல் இந்த கலவையை உடைக்கிறது.
மூளையானது ஹைபோதாலமஸ் எனப்படும் நரம்பு செல்களின் ஒரு சிறப்புப் பகுதியானது, கண்கள் இயற்கையான அல்லது செயற்கை ஒளிக்கு வெளிப்படும்போது சமிக்ஞைகளை செயலாக்குகிறது.
இந்த சமிக்ஞைகள் பகல் அல்லது இரவு என்பதை மூளை தீர்மானிக்க உதவுகிறது.
மாலையில் இயற்கையான ஒளி மறைவதால், உடல் மெலடோனின் என்ற ஹார்மோனை வெளியிடும், இது தூக்கத்தைத் தூண்டும்.
காலையில் சூரியன் உதிக்கும் போது, உடல் ஆற்றல் மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் கார்டிசோல் என்ற ஹார்மோனை வெளியிடும்.
ஆகவே நாம் நமது உடல் மற்றும் மூளைக்கேற்ப அந்த சரியான நேரங்களில் உறங்காது விடுவது பிற்காலத்தில் மிக பெரிய விளைவுகளை உருவாக்குகிறது.
ஆகவே சரியான நேரத்தில் தூங்கி ஆரோக்கியமான வாழ்க்கை ஒன்றினை வாழ்வோம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.