சசிகலாவுக்கு ஜோதிடர் கொடுத்த முக்கிய அட்வைஸ்! மெளனத்திற்கு காரணம் இது தான் என தகவல்
சசிகலா விடுதலையான தமிழக திரும்பிய நிலையில், அவர் அமைதிக்கு முக்கிய காரணம் ஜோசியர் கொடுத்த அட்வைஸ் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சமீபத்தில் விடுதலையாகி தமிழகம் திரும்பினார்.
சசிகலாவின் வருகை, தமிழக அரசியலில் ஒரு புயலை கிளப்பும் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் மெளனமாய் இருக்கிறார்.
அவரின் இந்த மெளனத்திற்கு முக்கிய காரணம், ஜோசியர் கொடுத்த அட்வைஸ் தானாம்,
ரேவதி நட்சத்திரம், மீன ராசிக்காரான சசிகலாவுக்கு பிப்ரவரி 17-ஆம் திகதிக்கு பிறகுதான் நல்ல நேரம் ஆரம்பிக்கிறது.
இதனால், அதன் பின்னரே அரசியல்ரீதியிலான சந்திப்புகளை வைத்துக்கொள்ளும்படி அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, மோடியும் தமிழகம் வந்து சென்றிருப்பதால், தற்போதைக்கு எந்த ஒரு அதிரடி முடிவும் எடுக்க வேண்டாம். கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை நீதிமன்றம் மூலம் பெற்ற பிறகு, ஆட்டத்தை துவங்கலாம் என்பது தான் சசிகலாவின் முடிவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.