ஆட்சி கவிழ்ப்பை தொடர்ந்து மியான்மரில் உள்ள அனைத்து விமானிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய உத்தரவு! வெளியான தகவல்
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பை தொடர்ந்து உள்ளூர் மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து ஜூன் மாதம் வரை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2020-ல் மியான்மரில் நடந்த பொதுத் தேர்தலில் National League for Democracy (NLD) கட்சியின் தலைவர் ஆங் சான் சூ கி வெற்றிப்பெற்றார்.
ஆனால், பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி வந்த அந்நாட்டு இராணுவம், நேற்று காலை திடீர்சோதனையில் ஈடுபட்டு ஆளுங்கட்சி தலைவர் ஆங் சாங் சூ கி, ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சிறைபிடித்து வைத்துள்ளது.
மியான்மர் இராணுவத்தின் நடவடிக்கைக்கு அமெரிக்க உட்பட பல உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று நாட்டில் உள்ள அனைத்து விமானிகளுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அனுமதியின்றி யாரும் உள்ளூர், சர்வதேச மற்றும் நிவாரண விமானங்களை மே 31ம் திகதி வரை இயக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேசமயம் விமான நிலையங்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.