ஜேர்மனியில் முக்கியத்துவம் வகிக்கும் மாகாண தேர்தல்கள்: காரணம் இதுதான்
ஜேர்மனியில் இரண்டு மாகாணங்களில் இந்த வார இறுதியில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இன்னொரு மாகாணத்தில் அடுத்த சில வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், அந்த தேர்தல்களை அனைவரும் உற்று கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி ஜேர்மனியில் மாகாண தேர்தல்கள் முக்கியத்துவம் வகிப்பதற்கு காரணம் என்ன?
புலம்பெயர்ந்தோருக்கு அச்சத்தை உருவாக்கியுள்ள விடயம்
விடயம் என்னவென்றால், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள், Alternative for Germany (AfD) என்னும் கட்சி தேர்தல்களில் பெரும் வெற்றி பெரும் என தெரிவித்துள்ளன.
AfD கட்சி, புலம்பெயர்தல் எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட வலதுசாரிக் கட்சி ஆகும்.
அக்கட்சியினர், தொடர்ந்து புலம்பெயர்ந்தோர் மீது தாக்குதல்கள் நடத்திவருகிறார்கள். ஆகவே, தேர்தல்களில் அக்கட்சி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளதால், புலம்பெயர்ந்தோர் அச்சம் அடைந்துள்ளனர்.
பொருளாதாரத்துக்கும் பாதிப்பு
அத்துடன், AfD கட்சி ஆட்சிக்கு வருமானால், குறிப்பாக, கிழக்கு ஜேர்மனியின் பொருளாதாரத்துக்கு அவசியமானவர்கள் என கருதப்படும் வெளிநாட்டவர்கள் அங்கு செல்ல தயக்கம் காட்டுவதால் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
மேலும், தொழில் நடத்துவோரைப் பொருத்தவரை, அவர்களுக்கு வெளிநாட்டுப் பணியாளர்கள் தேவை. ஆனால், AfD கட்சி ஆட்சிக்கு வருமானால் வெளிநாட்டவர்கள் அவர்களைக் குறித்து அச்சம் கொண்டுள்ளதால், தொழில்கள் பாதிக்கும்.
ஆனாலும், AfD கட்சி குறித்த அச்சம் காரணமாக, தொழில்துறையினர் அதைக் குறித்து பேசவே பயப்படும் ஒரு நிலையும் காணப்படுகிறது.
ஆக, மாகாண தேர்தல்கள் புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களை பணிக்கமர்த்துவோர் மத்தியில் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுவதை மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |