சிவப்பு கிட்னி பீன்ஸ் நல்லது தான்.. ஆனால் ஊறவைத்து சாப்பிடணும்- ஏன் தெரியுமா?
சுண்டல், பயிறு வகைகளை சமைப்பதற்கு முதல் நாளே அதை ஊற வைத்து அடுத்த நாள் சமைப்பார்கள்.
குறைந்த பட்சம், ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை ஊற வைத்தால் தான் அடுத்த நாள் வேக வைக்க, சமைக்க மென்மையாக இருக்கும்.
இதில் ஒரு சில பயிறு வகைகளை கட்டாயமாக ஊற வைக்க வேண்டும். இல்லையென்றால், சரியாக சமைக்க முடியாது. மேலும், அது செரிமானத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
ராஜ்மா என்று கூறப்படும் சிவப்பு கிட்னி பீன்ஸை ஊறவைத்துதான் சமைக்க வேண்டும்.
red beans and eric
ஏன் ஊறவைத்து சமைக்க வேண்டும்?
சிவப்பு கிட்னி பீன்ஸ் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பயறு வகைகளில் ஒன்று. இதை பலவிதமாக சமைக்கலாம்.
ஆனால், இதை பொறுத்தவரை, வயிறு உப்பசம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்த கூடிய பிரச்சனைகளும் இருக்கின்றது.
பொதுவாகவே பயிறு மற்றும் சிறு தானிய வகைகளில் இருக்கும் லெக்டின் மற்றும் பைட்டோஹெமாக்ளூடினின் ஆகிய இரண்டு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
எனவே இதை பச்சையாக சாப்பிட்டாலும் அல்லது சரியாக சமைக்காமல் வேக வைக்காமல் சாப்பிட்டாலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
முழுமையாக சமைக்காமல் சாப்பிடும் போது செரிமானக் கோளாறை ஏற்படுத்தி, உடல்நல பாதிப்புகளை உண்டாக்கும். எனவே கிட்னி பீன்ஸ் என்று சொல்லப்படும் ராஜ்மாவை நிச்சயமாக ஊற வைத்துத்தான் சமைக்க வேண்டும்.
ஊறவைத்து சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள்
பீன்ஸை ஊறவைத்து சாப்பிடுவதால் ஆன்டி-நியூட்ரியன்ட்ஸ் குறையும்.உடலுக்கு தேவையற்ற எதிர்மறையான ஒரு சில சத்துக்களை ஆன்டி-நியூட்ரியன்ட்ஸ் என்று கூறப்படுகிறது.
இதுதான் லெக்டின் மற்றும் பைட்டோஹெமாக்ளூடினின் ஆகும். இவை உடல் சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கிறது மற்றும் உணவு செரிமானம் ஆவதை தாமதமாக்கி, வயிறு உப்புசம் வயிற்றுவலி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இதை உண்பதால் உப்புசம், வயிற்றுப்பொருமல் மற்றும் வாயுத்தொல்லையைத் தடுக்கும். கிட்னி பீன்ஸை ஊற வைத்து சமைக்கும் பொழுது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது.
the kitchen community
அதுமட்டுமில்லாமல், ஊற வைக்கும் பொழுது இதிலிருக்கும் காம்ப்ளக்ஸ் ஆன சர்க்கரை உடைக்கப்பட்டு, சமைப்பதற்கு மட்டுமல்லாமல் செரிமானம் ஆவதற்கும் எளிதாகிறது.
சர்க்கரையைப் போலவே, இதில் இருக்கும் காம்ப்ளக்ஸ்,கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்களை உடைக்கிறது. எனவே, இதன் மூலம் ஆரோக்கியமான என்சைம்கள் செயல்பட்டு, செரிமானம் மேம்படும்.
செரிமானம், சத்து, வயிறு சார்ந்த பாதிப்புகளைத் தடுப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஊறவைக்க வில்லை என்றால், இதை சரியாக சமைக்கவே முடியாது. நேரடியாக அப்படியே இதை வேக வைக்க முடியாது, முழுதாக வேகாது. எனவே, ஊற வைத்தால் தான் அது மிருதுவாக மாறும், சுவை கூடும், எளிதாக சமைக்கலாம்.