ஜெலென்ஸ்கியுடன் அமைதி ஒப்பந்தம் சாத்தியமல்ல... பிரித்தானியாவிற்கும் புடின் மிரட்டல்
பேச்சு வார்த்தைக்கு என ஜெலென்ஸ்கியை மாஸ்கோவிற்கு அழைத்திருந்த புடின் தற்போது மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நியாயமான இலக்கு
அத்துடன், உக்ரைனில் களமிறக்க வாய்ப்புள்ள பிரித்தானியா மற்றும் நேட்டோ படைகளுக்கும் புடின் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்யாவின் Vladivostok நகரில் முன்னெடுக்கப்பட்ட கிழக்கு பொருளாதார மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய விளாடிமிர் புடின்,
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் படைகள் களமிறங்கினால் அவர்களின் அழிவுக்கான நியாயமான இலக்குகளாக இருக்கும் என்றார்.
பாரிஸ் நகரில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் முன்னெடுக்க கூட்டம் ஒன்றில், உக்ரைனில் அமைதிப்படையை களமிறக்குவது தொடர்பில் விவாதிக்கப்பட்டு, 26 நாடுகள் பங்கேற்க ஒப்புக்கொண்ட நிலையிலேயே, புடின் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
மட்டுமின்றி, ரஷ்யா இதுவரை பலமுறை அமைதி ஒப்பந்தங்களை மீறியும் உள்ளது. அத்துடன், மாஸ்கோவில் வந்து பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜெலென்ஸ்கியை புடின் கெஞ்சியதும், அதற்கு அவர் மறுப்பும் தெரிவித்திருந்தார்.
மாஸ்கோ மட்டுமே
ஜெலென்ஸ்கியை புடின் மாஸ்கோவிற்கு அழைப்பது இது இரண்டாவது முறையாகும். உக்ரைன் தரப்பு ரஷ்யாவிற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், கண்டிப்பாக முடிவு எட்டப்பட வாய்ப்பிருப்பதாக புடின் குறிப்பிட்டிருந்தார்.
மட்டுமின்றி, ஜெலென்ஸ்கியின் பாதுகாப்பிற்கு ரஷ்யா 100 சதவீதம் உத்தரவாதம் அளிப்பதாகவும் புடின் குறிப்பிட்டிருந்தார். இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு உண்மையில் உகந்த இடம் அது மாஸ்கோ மட்டுமே என்றும் புடின் தெரிவித்திருந்தார்.
ஆனால், ஜெலென்ஸ்கி தொடர்ந்து மறுத்து வருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித்தொடர்பாளர் கடுமையாக விமர்சித்திருந்தார். மாஸ்கோவில் அவரை அழைப்பது பேச்சுவார்த்தைக்கு மட்டுமே, அவரை சிறைபிடிப்பது நோக்கமல்ல என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |