தன்னை விட 13 வயது குறைவான நபரை மூன்றாம் திருமணம் செய்த பிரபல கிரிக்கெட் வீரரின் முன்னாள் மனைவி!
பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரிஹாம் கான் தன்னை விட 13 வயது குறைவான நபரை மூன்றாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இம்ரான் கானின் முன்னாள் மனைவி
அதன்படி 49 வயதான ரிஹாம் கானுக்கும், 36 வயதான மிர்சா பிலாலுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. மிர்சா நடிகராகவும், மொடலாகவும் இருக்கிறார். மிர்சாவுக்கும் இது மூன்றாவது திருமணம் ஆகும்.
அமெரிக்காவில் வசிக்கும் ரிஹாமின் சமூகவலைதள பதிவில், அமெரிக்காவின் சியாட்டிலில் மிர்சாவின் பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் திருமணம் அழகாக நடைபெற்றது, இறுதியாக நான் நம்பக்கூடிய ஒரு மனிதரை கண்டுபிடித்துவிட்டேன் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Instagram/officialrehamkhan
இங்கிலாந்தில் வேலை
ரிஹாம் கான் கடந்த 1973ல் லிபியாவில் பிறந்தார், 90களின் நடுப்பகுதியில் இங்கிலாந்தில் ஒளிபரப்புப் பத்திரிகையாளராகப் பணியாற்றத் தொடங்கினார். 2012 இல் பாகிஸ்தானுக்குச் சென்ற பிறகு, உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இம்ரான் கானை நேர்காணல் செய்யும்போது அவரைச் சந்தித்தார்.
இதையடுத்து இம்ரான் கானும் - ரிஹாம் கானும் கடந்த 2015ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் அடுத்த 10 மாதத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
filephoto/news18