இம்ரான் கானுக்கு என்ன ஆனது? சகோதரிகள் குற்றச்சாட்டு..தீயாய் பரவும் தகவல்கள்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த தகவல்கள் தீயாக பரவி வருகின்றன.
ராவல்பிண்டி சிறையில் முன்னாள் பிரதமர்
ஜனவரி 2025யில் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட பல வழக்குகளின்படி ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டார். 
ஆனால், அங்கு அவர் அடிக்கடி சிறை அதிகாரிகளால் தவறாக நடத்தப்பட்டதாகவும், துன்புறுத்தப்பட்டதாகவும் புகார் அளித்து வருகிறார்.
இம்ரான் கான் தனது மரணம் குறித்து சரிபார்க்கப்படாத கூற்றுக்களால் சமூக ஊடகங்களில் அடிபட்டு வருகிறார்.
அவர் சிறையில் கொலை செய்யப்பட்டார் என்ற ஆதாரங்களில் இருந்து, தகவல் கிடைத்ததாக ஆப்கான் டைம்ஸ் என்ற ஒரு குறிப்பிட்ட ஹேண்டில் கூறியதைத் தொடர்ந்துதான் இந்த வதந்திகள் தொடங்கின.
எனினும், ஆதாரமற்ற இந்த கூற்றுக்கள் எந்த நம்பகமான துறையாலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சகோதரிகள் குற்றச்சாட்டு
இந்த நிலையில், சிறையில் உள்ள இம்ரான் கானை சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியான சிறிது நேரத்திலேயே வதந்திகள் இன்று கிளம்பியுள்ளன.
இம்ரான் கான் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது மூன்று சகோதரிகளான நோரீன், அலீமா மற்றும் உஸ்மா ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், அவர் அடிக்கடி சிறை அதிகாரிகளால் தவறாக நடத்தப்பட்டதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் புகார் அளித்துள்ளனர். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |