மூன்றாவது மனைவியை பிரிந்தாரா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்? தீயாக பரவிய தகவலுக்கு கிடைத்த விளக்கம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவர் மூன்றாவது மனைவி புஷ்ரா பீபி இருவரும் பிரிவின் விளிம்பில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதை புஷ்ராவின் தோழி மறுத்துள்ளார்.
இம்ரான் கானுக்கும், புஸ்ராவுக்கும் கடந்த 2018ல் திருமணம் நடைபெற்றது. ஒரு முறை தனது மனைவியை பற்றி குறிப்பிடும் போது அவர் தனது ஆத்ம துணை (soulmate) என கூறியிருந்தார் இம்ரான் கான்.
இந்நிலையில் இம்ரான் கானும், புஷ்ராவும் பிரியவுள்ளதாகவும், பிரிவின் விளிம்பில் உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியானது. மேலும் புஸ்ரா தனது தோழியான ஃபரா கான் வீட்டில் லாகூரில் தங்கியுள்ளார் என கூறப்பட்டது.
இது குறித்து பேசிய புஸ்ராவின் நெருங்கிய தோழியான ஃபரா கான், இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் இம்ரானின் இல்லமான பானி காலாவில் புஷ்ரா பீபி தங்கியுள்ளார். தம்பதிகள் குறித்து போலியான விஷம பிரசாரம் பரப்பப்பட்டுள்ளது.
மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பொய்களைப் பரப்பும் அளவுக்கு கீழ்த்தரமான நிலைக்கு அரசியல் சென்றுவிடக் கூடாது. நாட்டின் முதல் பெண்ணான புஷ்ரா தனது கணவருடன் தான் வசிக்கிறார், அவர்களுக்குள் சண்டை எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதனிடையில் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் ஷாபாஸ் கில் ஞாயிறு அன்று விடுத்த அறிக்கையில், முதல் பெண்மணி குறித்து தவறான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் புஷ்ரா, இம்ரான் கானுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறி ஃபரா கான் வீட்டிற்கு சென்றுவிட்டார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.