வீட்டிற்குள் புகுந்து ஆதரவாளர்களை தாக்கிய பொலிஸ்! இம்ரான் கான் வெளியிட்ட வீடியோவால் பாகிஸ்தானில் உச்சக்கட்ட பரபரப்பு
பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆதரவாளர்களை பொலிஸார் வீடு புகுந்து தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கைது நடவடிக்கை
முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய பொலிஸார் அவரது வீட்டிற்கு சென்றனர்.
ஆனால் அங்கே இம்ரானின் தொண்டர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் வன்முறையாக வெடித்ததால் கைது நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
The assault on my house today was first of all a contempt of court. We had agreed that an SP with one of our people would implement a search warrant bec we knew otherwise they would plant stuff on their own, which they did. Under what law did they break the gate, pull down trees pic.twitter.com/110uTeIlce
— Imran Khan (@ImranKhanPTI) March 18, 2023
பொலிஸார் தாக்குதல்
இந்த நிலையில் இஸ்லமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜராக சென்றார். அவர் வீட்டை விட்டு கிளம்பியதும், பொலிஸார் அதிரடியாக வீட்டினுள் நுழைந்ததாகவும் ஆதரவாளர்களை தாக்கியதாகவும், அவரின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இம்ரான் கான் வெளியிட்டுள்ள வீடியோவில் பொலிஸார் பலரை கடுமையாக தாக்குகின்றனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.